சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரேவுக்கு பிறந்த நாள் வாழ்த்து சொன்ன ஷாருக்

சில மாதங்களுக்கு முன்பு ஷாருக் கானுக்கு பெரும் போரே தொடுத்திருந்தது சிவசேனா. அவர் நடித்த மை நேம் இஸ் கான் படத்தை வெளியிடக் கூடாது என்று கூறி பெரும் ரகளை செய்தது அக்கட்சி. இதுதொடர்பாக பெரும் பிரச்சினை உருவாகி பின்னர் ஒரு வழியாக ஓய்ந்தது.
இந்த நிலையில் யாரும் எதிர்பாராத வகையில், உத்தவ் தாக்கரேவின் 50வது பிறந்த நாளையொட்டி அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார் ஷாருக் கான்.
வழக்கமான வாழ்த்துஅட்டை மூலமாக அல்லாமல், சிவசேனாவின் சாம்னா பத்திரிக்கையில், அரை பக்க விளம்பரமாக தனது வாழ்த்தை வித்தியாசமாக சொல்லியிருந்தார் ஷாருக்.
தனது ரெட் சில்லிஸ் என்டர்டெய்ன்மென்ட் நிறுவனத்தின் சார்பி்ல் இந்த பிறந்த நாள் வாழ்த்தை கொடுத்திருந்தார் ஷாருக்.
இதுகுறித்து உத்தவ் தாக்கரேவிடம் கேட்டபோது, அனைவரின் வாழ்த்துகளையும் நான் ஏற்றுக் கொள்கிறேன் என்று ஒற்றை வரியில் முடித்துக் கொண்டார்.


Click it and Unblock the Notifications











