ஸ்ரீகாந்த் பிறந்தநாள்!

ஸ்ரீகாந்த்துக்கு இன்று 29வது பிறந்த நாளாகும். இதையொட்டி குமரன் காலனியில் உள்ள தனது இல்லத்தில் ரசிகர்கள் புடை சூழ சிறப்பாக கொண்டாடினர்.
பெருமளவில் திரண்டிருந்த ரசிகர்கள் மத்தியில் கேக் வெட்டி பிறந்த நாளை கொண்டாடினார் ஸ்ரீகாந்த்.
முன்னதாக காலையில் தனது பெற்றோரிடம் ஆசிர்வாதம் பெற்றார். பின்னர் மாநிலம் முழுவதிலுமிருந்து வந்த ரசிகர்களை சந்தித்தார். அவர்களின் வாழ்த்தையும் பெற்றார்.
ஸ்ரீகாந்த் இல்லம் உள்ள தெரு முழுவதும் ரசிகர்கள் பட்டாசுகளை வெடித்து கொண்டாடினர்.
பிறந்த நாள் ஏற்பாடுகளை ஸ்ரீகாந்த் ரசிகர் மன்ற தலைவர் குணா மற்றும் நிர்வாகிகள் சுதாகர், வடிவேலு ஆகியோர் செய்திருந்தனர்.
Comments


Click it and Unblock the Notifications