முழு ஹீரோவாகும் சசிக்குமார்

நான்கு நெருங்கிய நண்பர்களின் கதை இது. கேரளாவைச் சேர்ந்த நிவேதிதா நாயகியாக நடிக்கிறார். சமுத்திரக்கனி இப்படத்தை இயக்குகிறார். மைக்கேல் ராயப்பன் படத்தைத் தயாரிக்கிறார்.
சுப்ரமணியபுரம் படத்தின் மூலம் நடிகரானவர் சமுத்திரக்கனி. சசிக்குமாருக்கு படத்தில் முக்கியப் பாத்திரம் ஏற்று நடித்தார். இப்போது சமுத்திரக்கனி, சசிக்குமாரை வைத்து இயக்கப் போகிறார்.
எந்தவித இலக்கும் இல்லாமல் வாழும் நான்கு நண்பர்களின் வாழ்க்கை எதிர்பாராத ஒரு சம்பவத்தைத் தொடர்ந்து திசை மாறிப் போகிறது. வெவ்வேறு பாதையில் அவர்கள் அடி போடுகிறார்கள். அதையே படமாக உருவாக்குகிறார் சமுத்திரக் கனி.
இப்படம் குறித்து ஏகப்பட்ட எதிர்பார்ப்பு நிலவுகிறது. சுப்ரமணியபுரம் படத்தில் நடித்தது போல இல்லாமல் மாறுபட்ட பாத்திரத்தில் வருகிறாராம் சசிக்குமார்.
தமிழ் சினிமாவுக்கு இன்னொரு ஹீரோ ரெடியாகிறார்..
More from Filmibeat
சசிக்குமார் சமுத்திரக்கனி சினிமா சுப்ரமணியபுரம் தமிழ் நாடோடிகள் ஹீரோ cinema hero nadodigal samudrakani sasikumar subramaniapuram


Click it and Unblock the Notifications











