சிங்கம்: மீண்டும் இணையும் சூர்யா-ஹரி!

இந்த படத்துக்கு சிங்கம்' என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. வேல், ஆறு ஆகிய இரண்டு வெற்றி படங்களை அடுத்து சூர்யாவும், இயக்குநர் ஹரியும் மீண்டும் இணையும் படம் இது.
படத்தின் கதாநாயகி மற்றும் நடிகர்-நடிகைகள் தேர்வு நடைபெறுகிறது.
ரிலையன்ஸ் பிக் பிக்சர்ஸ், முதன்முதலாக தென்னிந்திய திரையுலகில் இந்தப் படத்தின் மூலம் நுழைகிறது. இந்த நிறுவனம் ஸ்டூடியோ கிரீன் நிறுவனத்துடன் இணைந்து, அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் இன்னொரு பிரமாண்டமான படத்தைத் தொடங்குகிறது.
இப்படத்தில், 'பருத்தி வீரன்' கார்த்தி நாயகனாக நடிக்கிறார். தலைநகரம், மருதமலை ஆகிய படங்களை இயக்கிய சுராஜ் டைரக்டு செய்கிறார்.
மேலும் பல புதிய நிறுவனங்களுன் இணைந்து படங்கள் தயாரிக்க ஸ்டுடியோ கிரீன் திட்டுமிட்டு வருகிறது.
Comments


Click it and Unblock the Notifications