உன்னைப் போல் ஒருவன் எப்போ?

By Staff

Kamal Haasan
கமல்ஹாசனின் பொன்விழாப் படம் எனும் பெருமையோடு வெளியாகும் உன்னைப் போல் ஒருவன் அவர் ஏற்கெனவே அறிவித்ததைப் போல ஆகஸ்ட் 12ம் தேதி வெளியாகவில்லையாம். செப்டம்பர் மாதம் படத்தை வெளியிட முடிவு செய்துள்ளாராம் கமல்.

சரியாக 50 ஆண்டுகளுக்கு முன் ஆகஸ்ட் 12-ம் தேதி களத்தூர் கண்ணம்மாவில் குழந்தை நட்சத்திரமாக தனது திரையுலகப் பயணத்தைத் துவங்கினார் கமல்.

இந்த ஆண்டு ஆகஸ்ட் 12ம் தேதி வந்தால், அவர் சினிமாவில் நடிக்க வந்து 50 ஆண்டுகள் பூர்த்தியாகின்றன.

இதைக் கொண்டாடும் விதத்தில் ஆர்ப்பாட்டமாக படத்தை வெளியிட வேண்டும் என கமல் ரசிகர்கள் முடிவு செய்தனர். கமலும் அதற்கு ஒப்புக் கொண்டு, ஆகஸ்ட் 12ம் தேதி படம் ரிலீஸ் என்று கூறிவந்தார்.

ஆனால் இப்போது, இந்த திட்டத்தில் ஒரு மாறுதல்...

பொன்விழா கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக படத்தை வெளியிடுவதால், சில சிக்கல்களை இந்தப் படம் எதிர்நோக்க வேண்டியுள்ளதாம். தமிழில் மட்டுமல்ல, தெலுங்கிலும் இந்தப் படம் நேரடி வெளியீடாக வருகிறது. தமிழில் மோகன்லால் செய்த வேடத்தைதான் தெலுங்கில் வெங்கடேஷ் செய்கிறார்.

ஆகஸ் 21-ம் தேதி தொடங்கி செப்டம்பர் மூன்றாம் வாரம் வரை ரம்ஜான் நோன்பு என்பதால், ஆந்திரா- கேரளாவில் பொதுவாக புதுப் படங்கள் பெரிய அளவில் வெளியாகாது. வசூல் பாதிக்கும். எனவே நோன்புக் காலம் முடிந்தபிறகு படத்தை வெளியிட்டால் வசூல் பாதிக்காது என மோகன்லால் மற்றும் வெங்கடேஷ் இருவருமே கமலிடம் எடுத்துக் கூறினார்களாம்.

இன்னொரு முக்கியமான காரணம், தாணுவின் கந்தசாமி வரும் ஆகஸ்ட் 15ம் தேதி வெளியாகிறது. இரு பெரிய படங்கள் ஒரே நாளில் மோதிக் கொள்ளவது நல்லதில்லை என்று வினியோகஸ்தர்கள் கருதுகிறார்கள்.

இதனால்தான் இந்த தள்ளிப் போடல் என்கிறது ஆழ்வார்ப்பேட்டை வட்டாரம்!.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X