'சிங்கர்' ஆன சீயான்!

சுசி.கணேசன் இழைத்து இழைத்து உருவாக்கி வரும் படம் கந்தசாமி. கலைப்புலி தாணு தயாரித்து வருகிறார். விக்ரம் பிரமிப்பூட்டும் வகையில் நடித்து வருகிறார். ஜோடி போட்டிருப்பவர் ஷ்ரியா.
படத்தில் அவரும் ஷ்ரியாவும் ஆடிப் பாடும் டூயட் பாடல் ஒன்று வருகிறது. அதில் சுசித்ரா, ஷ்ரியாவுக்காக குரல் கொடுத்துள்ளார். விக்ரமுக்காக அவரே குரல் கொடுத்துள்ளார்.
எக்ஸ்கியூஸ் மி, மிஸ்டர் கந்தசாமி என்று அந்தப் பாடல் தொடங்குகிறது. மனதை அள்ளும் லொகேஷன்களில் இந்தப் பாடலை படம் பிடித்துள்ளனர்.
தேவிஸ்ரீபிரசாத்தின் இசையில் பாடல் ஏற்கனவே ஹிட் ஆகி விட்டது (ஆடியோ ஏற்கனவே ரிலீஸாகி விட்டது). ஆடியோ வெளியீட்டின்போதே இந்தப் பாடலின் சில காட்சிகளைக் காட்டினர். மேலும் டிரெய்லரிலும் இப்பாடல் இடம் பெற்றிருந்தது.
இப்போது சின்னச் சின்ன நகாசு வேலைகள் செய்து பாடலுக்கு மேலும் மெருகேற்றியுள்ளனராம். இப்போது முன்பை விட புஷ்டியாக இருக்கிறதாம் பாடல்.
விக்ரம் பின்னணிப் பாடல் பாடுவது புதிதில்லை. ஏற்கனவே ஏவி.எம். ஜெமினி படத்தில் ஓ போடு பாடலைப் பாடியுள்ளார். இப்போது கந்தசாமிக்காக குரல் கொடுத்துள்ளார்.
கலக்குங்க சாமி!


Click it and Unblock the Notifications











