விலகினார் விக்ரம்... விசனப்படாத சசிகுமார்!

'சுப்ரமணியபுரம்' படத்தின் பிரமாண்ட வெற்றிக்குப் பிறகு சசிகுமாருக்கு வந்த வாய்ப்புகள் ஏராளம். அவரோ தனது 'நண்பர்' நடிகர் விக்ரமுக்கு முன்பு அளித்த வாக்குறுதிப்படி ஒரு படம் செய்வதாக அறிவித்தார்.
சமுத்திரக்கனி, ஏ எல் அழகப்பனை வைத்து முற்றிலும் வித்தியாசமான கதையுடன் இந்தப் படத்தை இயக்கி வந்தார் சசிகுமார். நகரம் என்று படத்துக்குப் பெயர் வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.
கிட்டத்தட்ட 90 சதவிகிதம் படம் முடிந்துவிட்ட நிலையில், தடாலடியாக இந்தப் படத்திலிருந்து விலகிக் கொள்வதாக அறிவித்துள்ளார் நடிகர் விக்ரம். காரணத்தைக் கூட சொல்லவில்லையாம்.
ஆனால் சசிகுமார் இதற்கெல்லாம் கவலைப்படுகிறவரா என்ன... அடுத்த நிமிடமே படத்தை தனது சொந்தப்பட நிறுவனமான 'கம்பெனி புரொடக்ஷன்' தயாரிப்பதாக அறிவித்துவிட்டு, உற்சாகமாக வேலையைத் தொடர்கிறார்!
Comments
கம்பெனி புரொடக்ஷன்ஸ் சசிகுமார் நகரம் விக்ரம் விக்ரம் படம் விலகல் company production nagaram sasikumar vikram


Click it and Unblock the Notifications