சென்னை வரும் விவேக் ஓபராய்!

பிரின்ஸ் படத்தின் தமிழ் பதிப்புக்கும் இந்திக்கு இணையான முக்கியத்துவம் தருகிறார் விவேக். இதற்காக படத்தின் நாயகி நீரு சிங், இயக்குநர் சச்சின் குப்தா உள்ளிட்ட குழுவினருடன் திங்கள்கிழமை சென்னை வரும் விவேக் ஓபராய், சத்யம் சினிமாஸ் வளாகத்தில் பத்திரிகையாளர்களைச் சந்திக்கிறார்.
இதற்காக விரிவான ஏற்பாடுகளைச் செய்துள்ளார் படத்தின் பிஆர்ஓ நிகில்முருகன்.
இந்தப் படத்தை ஒரு முழுமையான தமிழ் சினிமாக வெளியிட வேண்டும் என்பது விவேக்கின் விருப்பமாம். அதற்காகத்தான் இத்தனை விரிவான முயற்சிகள் என்கிறார் நிகில்.
கூக்கி வி குலாட்டி இயக்கியுள்ள பிரின்ஸ் படம், ஏப்ரல் 9-ம் தேதி உலகமெங்கும் இந்தி - தமிழில் வெளியாகிறது. படத்தில் விவேக்குக்கு இன்னொரு ஜோடியும் உண்டு. அவர் நந்தனா சென்.
டிப்ஸ் இன்டஸ்ட்ரீஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. சச்சின் குப்தா இசையமைத்துள்ள இந்தப் படத்தில் மொத்தம் 16 பாடல்கள் (சிடியில் உள்ளவை).


Click it and Unblock the Notifications











