பிளாக்கில் அவதூறு மெசேஜ்-பிளாக்கர் மீது அமிதாப் பச்சன் போலீஸில் புகார்

பிளாக்கோடு நிற்காமல், அமிதாப்பின் செல்போனுக்கும் அவதூறான எஸ்எம்எஸ்களை அவர் அனுப்பி வருகிறாராம்.
இதுகுறித்து அமிதாப் பச்சன் தனது பிளாக்கில் எழுதியுள்ளதாவது...
எனது பிளாக்கைப் பயன்படுத்தி ஒரு நபர் தொடர்ந்து அவதூறாக எழுதி வருகிறார். மிகவும் ஆபாசமான, அசிங்கமான வார்த்தைகளைப் பயன்படுத்துகிறார். மிகவும் வேதனை அளிக்கும் வகையில் உள்ளது அவரது செயல்.
எனது செல்போனுக்கும் கூட அவர் இதுபோன்ற எஸ்எம்எஸ்களை அனுப்பி வருகிறார்.
இதுகுறித்து மும்பை சைபர் கிரைம் போலீஸாரின் கவனத்திற்குக் கொண்டு சென்றுள்ளேன். இதுபோன்ற எந்த ஒரு ஆபாசமும் எனது பிளாக்கை அடையாமல் தடுக்க வேண்டும் என கோரியுள்ளேன்.
எனவே அந்த நபர் மீண்டும் இதுபோல நடந்து கொண்டால் நிச்சயம் சைபர் கிரைம் போலீஸ் வசம் சிக்குவது உறுதி என்று கூறியுள்ளார் அமிதாப் பச்சன்.
Comments
amitabh complaints to police அமிதாப் அமிதாப் அப்செட் அமிதாப் பச்சனுக்கு தொல்லை பிளாக்கர் பிளாக்கர் மீது அமிதாப் புகார் blogger harasses amitabh bloggers harassement to big b


Click it and Unblock the Notifications