இனி 'அடி' தான் .. பரத்

முனியாண்டி விலங்கியல் மூன்றாமாண்டு படத்தின் இறுதிக்கட்ட வேலைகளில் இருக்கும் பரத், தன் எதிர்காலப் படங்கள் குறித்துக் கூறியதாவது:
நான் எதுவும் பெரிசா பிளான் பண்ணல. எனக்கு இப்படி ஒரு இடம் கிடைச்சது அதிர்ஷ்டம்னுகூடச் சொல்வேன். கிடைச்ச இடத்தைத் தக்க வச்சிக்கிறது மிகப் பெரிய விஷயம்.
அதுகாகத்தான் படங்களைத் தேர்ந்தெடுத்து நடிக்கிறேன்.
முனியாண்டி... ஒரு ஆக்ஷன் படம்தான். வெறும் ஆக்ஷன் மட்டுமில்லாம, குடும்ப சென்டிமெண்ட் கலந்து கொடுத்திருக்கார் திருமுருகன் சார். அதனால படத்தோட பிரமாண்ட வெற்றி இப்பவே தெரியுது.
ஜூலை 4-ம் தேதி திரைக்கு வரும் இந்தப் படம் நிச்சயம் என் திரையுலக வாழ்க்கையில் பெரிய மாற்றத்துக்குக் காரணமாக அமையும்னு எதிர்பார்க்கிறேன்.
அடுத்து ஹரி இயக்கத்தில் அதிரடி ஆக்ஷன் படம் சேவலில் நடிக்கிறேன். இதுக்கடுத்து பேரரசுவின் திருத்தணி, சுரேஷ் கிருஷ்ணாவின் ஆறுமுகம் என வரிசையா அதிரடிப் படங்கள்தான்.
இந்தப் படங்கள் எல்லாவற்றிலுமே ஆக்ஷனும் குடும்ப பாசமும்தான் பிரதான இடம் பெற்றுள்ளன. காதல் சும்மா ஊறுகாய் மாதிரிதான் இருக்கும்.
இனி முழுக்க முழுக்க காதல் அல்லது, சென்டிமெண்ட் மட்டுமே உள்ள படங்களில் நடிக்க மாட்டேன், என்கிறார் பரத்.
நிஜத்தில் கூடவா!?


Click it and Unblock the Notifications











