கெளரவ வேடத்தில் தனுஷ் நடிக்கும் சீடன்!

அந்த பாசத்தில், இப்போது 'யோகி' படத்துக்குப் பிறகு சுப்பிரமணிய சிவா இயக்கும் 'சீடன்' படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டுள்ளார் தனுஷ்.
இந்தப் படத்தில் சிவபக்தராக வருகிறாராம் தனுஷ்.
அவர் நடிக்க ஒப்புக் கொண்டதற்கு முக்கிய காரணம் இந்த வேடம்தான். நிஜ வாழ்க்கையிலும் தீவிர சிவபக்தராம் தனுஷ்.
இன்னொரு முக்கியமான விஷயம்... இந்தப் படத்தில் தனுஷ்தான் ஹீரோ என்று நினைத்துக் கொண்டிருந்தால், அதை நீங்கள் மாற்றிக் கொள்ள வேண்டியிருக்கும்.
இதில் கெளரவ வேசடத்தில் நடிக்கிறாராம் அவர்.
இதுகுறி்த்து தனுஷ் கூறுகையில், "எனக்கு இந்தப் படத்தில் குறிப்பிட்ட அந்த ரோல் ரொம்பப் பிடிச்சிருந்தது. மேலும் கைவசம் கால்ஷீட்டும் கம்மி. எனவே இந்த கெளரவ வேடத்தில் நடிக்க சம்மதித்துள்ளேன். 20 சதவீதம்தான் இந்தப் படத்தில் என் பங்களிப்பு" என்று பகிரங்கமாகவே அறிவித்துவிட்டார்.
தனுஷ் கால்ஷீட் கிடைச்சுடுச்சு என்று சந்தோஷமாக இருந்த சிவாவுக்கு, இது கெளரவ வேடம் தான் என்ற அவரது இந்த தடாலடி அறிவிப்பு ஷாக் கொடுத்த மாதிரியாகிவிட்டதாம்!.


Click it and Unblock the Notifications











