ஜெய்க்கு தடை நீக்கம்!

By Staff

Jay with Vijayalakshmi in Adhey Neram Adhey Idam
நடிகர் ஜெய்க்கு விதித்திருந்த தடையை தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கம் நீக்கியுள்ளது. இதனால் பெரும் சிக்கலிலிருந்து மீண்டுள்ளார் ஜெய்.

வாய்த்துடுக்குத்தனமாக பேசப் போய் பெரிய பேஜாரில் சிக்கிக் கொண்டார் ஜெய்.

தமிழ் நாளிதழ் ஒன்றுக்கு அவர் சமீபத்தி்ல் அளித்த பேட்டியில், எனது இரு புதுப் படங்களும் கண்டிப்பாக ஓடாது என்று கூறி அப்படங்களின் தயாரிப்பாளர்களை அதிர வைத்தார் ஜெய்.

படம் வெளியாகும் முன்பே, அதன் ஹீரோவே இவ்வாறு பேசியதால் ஆத்திரமடைந்த தயாரிப்பாளர்கள், தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் கொடுத்தனர்.

இதையடுத்து தயாரிப்பாளர் சங்கம் விசாரணை நடத்தி ஜெய்க்கு ரெட் கார்டு போட்டு விட்டது.

இதையடுத்து ஜெய்யால் புதிய படங்களில் நடிக்க முடியாத நிலை ஏற்பட்டது. இந்த நிலையில், கோவா படத்தில் ஜெய்யை ஹீரோவாக புக் செய்திருக்கும் இயக்குநர் வெங்கட் பிரபுவும், தயாரிப்பாளர் செளந்தர்யா ரஜினியும் தயாரிப்பாளர் சங்கத்தை அணுகி ஜெய் மீதான தடையை நீக்குமாறும், இதனால் தங்களுக்கு பெரும் இழப்புகள் ஏற்படும் எனவும் விளக்கினர்.

ஜெய்யை வைத்து போட்டோ ஷூட் எடுத்து விட்டோம், புரோமஷனல் நடவடிக்கைகளையும் எடுத்து விட்டோம் என வெங்கட் பிரபு கூறியுள்ளார்.

இந்தப் பின்னணியில் ஜெய்யும் தான் பேசியதற்காக தயாரிப்பாளர் சங்கத்திடம் மன்னிப்பு கேட்டதாக தெரிகிறது.

இதையடுத்து ஜெய் மீதான தடையை தயாரிப்பாளர் சங்கம் நீக்கியுள்ளது. தற்போது நடித்து வரும் அர்ஜூனன் காதலி, அதே நேரம் அதே இடம், அவள் பேரு தமிழரசி, வாமணன் ஆகியவற்றை முதலில் நடித்து முடிக்குமாறும், பின்னர் கோவா படத்திற்குப் போகுமாறும் ஜெய்க்கு தயாரிப்பாளர் சங்கம் உத்தரவிட்டுள்ளதாம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X