எனது அண்ணன்கள்-ஜெயம் ரவி உருக்கம்!

இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய ரவி இப்படிக் கூறினார்:
இந்தப் படத்தில் எனக்கு மூன்று அண்ணன்கள். உடன் பிறந்த ராஜா இப்படத்தின் இயக்குநர். கூடப் பிறக்காவிட்டாலும் ஒரு அண்ணன் மாதிரி எனக்கு நல்ல ஆலோசனைகள் கூறும் பாஸ்கர் இன்னொரு அண்ணன். அவர்தான் இந்தப் படத்தின் ஒரிஜினல் படமான பொம்மரிலுவை இயக்கியவர்.
மூன்றாவது அண்ணன் பொம்மரிலுவில் நடித்த சித்தார்த். அவர் நடித்ததை அப்படியே செய்தால் போதும், வெற்றி நிச்சயம் எனும் அளவுக்கு பொம்மரிலுவில் சிறப்பாக நடித்திருந்தார். அதைப்பார்த்து அப்படியே ஒரிஜினாலிட்டி கெடாத வகையில் நடித்தாலே போதும் என நினைத்துக் கொண்டேன். அப்படியே நடித்திக்கிறேன்.
இப்படி ஒரு வேடத்தில் இனி என் கேரியரில் நடிப்பேனா என்பதே சந்தேகம்தான். வேறு படங்களில் வேறு நல்ல வேடங்கள் கிடைக்கலாம். ஆனால் இப்படி ஒரு வேடம் இனி கிடைக்கவே கிடைக்காது... ராஜாவைப் போல ஒரு அண்ணன் கிடைத்தது என் பூர்வ ஜென்ம புண்ணியம் என்றார் ரவி.
சந்தோஷ் சுப்பிரமணியம் ஏப்ரல் மாதம் வெளியாகிறது.


Click it and Unblock the Notifications











