மம்மூட்டிக்கு டாக்டர் பட்டம் : காங். எதிர்ப்பு

நடிகர் மம்மூட்டி, இயக்குநர் அடூர் கோபாலகிருஷ்ணன், இசைக் கலைஞர் மிருதங்க வித்வான் உமையாள்புரம் சிவராமன் ஆகியோருக்கு டாக்டர் பட்டம் வழங்க தீர்மானித்ததுள்ளது கேரள பல்கலைக் கழகம்.
பல்கலைக்கழக கூட்டத்தில் எடுக்கப்பட்ட இத்தீர்மானத்தை செனட் சபையும் அங்கீகரித்து விட்டது. இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் கேரள மாணவர் சங்க அமைப்பின் உறுப்பினர்கள் மம்மூட்டிக்கு டாக்டர் பட்டம் வழங்க கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
பல்கலைக்கழக பட்ஜெட் கூட்டத்தில் இவ்விருதை வழங்க கூடாதென அவர்கள் கடுமையாக எதிர்த்தனர்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சேனலான கைரளியின் தலைவராக மம்மூட்டி இருப்பதால் அவருக்கு இந்த விருதை வழங்க கூடாதெனவும், ஆஸ்கர் விருதுபெற்ற ரசூல் பூக்குட்டிக்கு வழங்க வேண்டுமெனவும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
Comments


Click it and Unblock the Notifications