இயக்கம் தொடங்குவரா ரஜினி?

கடந்த ஒரு மாதமாக அமெரிக்காவில் நடந்த எந்திரன் முதல்கட்டப் படப்பிடிப்பில் பங்கேற்றுவிட்டு இரு தினங்களுக்கு முன்புதான் சென்னை திரும்பியுள்ளார் ரஜினிகாந்த்.
அவர் சென்னையில் இருந்தவரை அரசியல் அல்லது சமூக நல இயக்கம் போன்றவை குறித்து எதுவும் பேசப்படவில்லை. ஆனால் ஷூட்டிங்குக்காக அமெரிக்கா சென்றபின், ரஜினி அரசியல் இயக்கம் தொடங்குவதாக பத்திரிகைகளில் செய்திகள் வரத் துவங்கின.
ரஜினி தரப்பில் வழக்கம்போல இதுகுறித்த மறுப்போ ஒப்புதலோ தெரிவிக்கப்படவில்லை. குறிப்பாக குசேலன் படத்தின் தோல்விக்குப் பிறகு ரஜினி எதைப் பற்றியும் பேசவே இல்லை.
இதனால் ரஜினி ரசிகர்கள் பெருமளவு சோர்ந்து போயிருந்தனர்.
இந்நிலையில் தனது ரசிகர் மன்றத்தினரை உற்சாகப்படுத்த அனைத்து மாவட்ட ரசிகர் மன்றப் பொறுப்பாளர்களையும் அக்டோபர் மாதம் ரஜினி சந்தித்துப் பேசவிருப்பதாக சத்தியநாராயணா தெரிவித்திருந்தார்.
இப்போது சென்னையில் உள்ள ரஜினி, ரசிகர் மன்ற சந்திப்புக்கான ஏற்பாடுகள் குறித்து தனது உதவியாளர்களுடன் ஆலோசனை செய்துவருவதாகக் கூறப்படுகிறது.
ரஜினி தனது ரசிகர்களை ஒருங்கிணைத்து அவர்கள் மூலம் ஏழை மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை தொடர்ந்து செய்யப்போவதாக நம்பகமான தகவல்கள் தெரிவிக்கின்றன.
இப்போதைக்கு அரசியல் பரகபரப்பு எதுவும் வேண்டாம் எனறும், ஏதாவது ஒரு அமைப்பின் மூலம் நல்ல காரியங்களை மட்டும் செய்தால் போதும் என்று ரஜி கூறியுள்ளதாகத் தெரிகிறது. இந்த இயக்கத்துக்காக தனிக் கொடியும் வடிவமைக்கப்பட்டுள்ளதாம்.
இந்த சமூக நல இயக்கத்தின் பின்னணியில் செயல்படப் போகிறவர் ரஜினியின் மகள் சௌந்தர்யாதான் என்றும் கூறுகிறார்கள்.
இதுகுறித்த முழு விபரங்களும் இன்னும் நான்கு தினங்களில் வெளியிடப்படும் என ரஜினி மன்றப் பிரமுகர்கள் தெரிவித்தனர்.
ஆனால் ராகவேந்திரா கல்யாண மண்டப நிர்வாகிகளோ, தங்களுக்கு இதுகுறித்து எந்தத் தகவலும் தெரியாது என்றும், 3-ம் தேதிவரை ராகவேந்திரா கல்யாண மண்டபத்தில் திருமண நிகழ்ச்சிகள் உள்ளதாகவும், அதன்பிறகு ரசிகர்கள் சந்திப்பு நடக்குமா என்பது குறித்து இப்போது எதுவும் சொல்ல முடியாது என்றும் கூறினர்.


Click it and Unblock the Notifications











