அமெரிக்க சிகிச்சை முடிந்து மும்பை திரும்பினார் சல்மான்!

By Shankar

Salman Khan
மும்பை: அமெரிக்காவில் அறுவை சிகிச்சை செய்துகொண்ட நடிகர் சல்மான்கான், மும்பை திரும்பினார். அவருக்கு ரசிகர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

பாலிவுட்டின் முன்னணி நடிகர்களுள் ஒருவரகான சல்மான்கான் (வயது 45) 'டிரைகெமினல் நியூரால்ஜியா' என்ற நரம்புக் கோளாறால் பாதிக்கப்பட்டிருந்தார். இதனால் முகத்தில் கன்னம், தாடைப்பகுதியில் தாங்க முடியாத வலியை அனுபவித்து வந்த அவர் அதிலிருந்து நிவாரணம் பெற அறுவை சிகிச்சை செய்து கொள்வதற்காக கடந்த மாதம் 29-ந் தேதி அமெரிக்காவுக்கு சென்றார்.

அங்கு பிட்ஸ்பர்க் நகரில் உள்ள மருத்துவமனையில் கடந்த மாதம் 31-ந் தேதியன்று அவருக்கு 8 மணி நேரம் ஆபரேஷன் நடைபெற்றது. அதைத்தொடர்ந்து குணம் அடைந்தார்.

பிக்பாஸ் சீஸன் 5-ல் பங்கேற்பு

நேற்று முன்தினம் இரவில் அவர் விமானம் மூலம் மும்பை திரும்பினார். அவரை குடும்பத்தினர், நண்பர்கள், ரசிகர்கள் உற்சாகத்துடன் வரவேற்றனர்.

பிரசித்தி பெற்ற 'பிக்பாஸ் ரியாலிட்டி ஷோ'வின் 5-வது சீசன் தொடக்க விழா இன்று (வியாழக்கிழமை) மும்பை மெகபூப் ஸ்டூடியோவில் நடக்கிறது. ஏற்கனவே வாக்குறுதி அளித்தபடி இந்த நிகழ்ச்சியில் சஞ்சய் தத்துடன் சல்மான்கான் கலந்துகொள்கிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X