'காக்கி'யை கையில் எடுக்கும் சரத்!

ஜிஜே சினிமா தயாரிக்க, சரத்குமார், நமீதா நடிக்க, வின்சென்ட் செல்வா இயக்க உருவாகி வந்த படம் காக்கி. ஆனால் ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு இப்படம் திடீரென கைவிடப்பட்டது.
படத்தின் முதல் ஷெட்யூல் படப்பிடிப்பை ஏற்கனவே வின்சென்ட் செல்வா முடித்து விட்டார். படத்துக்காக மொட்டையும் போட்டார் சரத்குமார். ஆனால் திடீரென படம் நிறுத்தப்பட்டு விட்டது.
இதையடுத்து சாணக்யா, தலைமகன் ஆகிய படங்களில் நடிக்கப் போய் விட்டார் சரத்.
இந்த நிலையில் படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவரான ஞானவேல் சமீபத்தில் சரத்தை அணுகி, படத்தை மீண்டும் எடுக்க விரும்புவதாக தெரிவித்தார். அதை சரத்குமாரும் உடனடியாக ஏற்றுக் கொண்டாராம். படம் எப்போது தொடங்கினாலும் நடித்துத் தருவதாகவும் உறுதியளித்துள்ளாராம்.
இதையடுத்து தற்போது சரத்குமார் நடித்து வரும் 1977 படத்தின் ஷூட்டிங் முடிந்தவுடன், காக்கியை படம் பிடிக்க வின்சென்ட் செல்வாவும், குழுவினரும் தயாராக உள்ளனர்.
இதுகுறித்து ஞானவேல் கூறுகையில், அதே பெயரில், அதே குழுவினருடன் காக்கி படம் வளரவுள்ளது. சரத்குமார் முழு ஒத்துழைப்புத் தருவதாக உறுதியளித்துள்ளார். சரத்குமார் போன்ற கலைஞருடன் மீண்டும் சேர்ந்து பணியாற்றுவது மகிழ்ச்சி அளிக்கிறது என்றார்.
கம்பீரமா வாங்க சரத்!


Click it and Unblock the Notifications











