'ஸ்டில்'களுக்கு விஜய் 'தடா'!

By Staff

Vijay with Shreya
பந்தயம் படத்தில் தான் நடித்துள்ள காட்சிகள் அடங்கிய ஸ்டில்களை வெளியிட வேண்டாம் என அப்படத்தின் தயாரிப்பாளரான ஹிதேஷ் ஜபக்குக்கு விஜய் உத்தரவிட்டுள்ளாராம்.

குருவி படத்திற்கு சிறப்பான வரவேற்பு கிடைக்காததால் அடுத்த படத்தை சூப்பர் ஹிட் படமாக கொடுக்க தீவிரமாக உள்ளார் விஜய். இதையடுத்து சில முக்கிய முடிவுகளையும் அவர் எடுத்துள்ளார்.

அதன்படி அடுத்த படம் ரிலீஸாகும் வரை தனது புகைப்படங்கள் எதுவும் மீடியாக்களில் வெளி வரக் கூடாது என்பதில் கவனமாக இருக்கிறார். இந்த முடிவை தனது தந்தை எஸ்.ஏ.சந்திரசேகரன் இயக்கியுள்ள பந்தயம் படத்திற்கும் அப்ளை செய்துள்ளார்.

பந்தயம் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவுக்கும் அவர் வரவில்லை. பதந்தயம் படத்தில் கெஸ்ட் ரோலில் நடித்துள்ளார் விஜய். இப்போது அதுதொடர்பான எந்த புகைப்படமும் மீடியாக்களில் வரக் கூடாது என்று படத்தின் தயாரிப்பாளர் ஜபக்குக்கு உத்தரவிட்டுள்ளாராம்.

இப்படத்தின் ஹீரோ நிதின் சத்யா, விஜய்யின் தீவிர விசிறியாக வருகிறார். விஜய் நடிக்கும் படத்தின் ஷூட்டிங்குக்கு அவர் வந்து வேடிக்கை பார்ப்பது போல ஒரு காட்சி வருகிறது. அப்படத்தின் பெயர் எம்.ஜி.ஆர். இயக்குநராக பேரரசு நடித்துள்ளார்.

இந்தக் காட்சிகள் அடங்கிய ஸ்டில்கள் எதுவும் வரக் கூடாது என்று தடை போட்டு விட்டாராம் விஜய்.

இதை விட முக்கியமாக இதை விஜய் நடித்துள்ள படம் என்று எந்தக் காரணத்தைக் கொண்டும் தியேட்டர்களுக்கு விற்கக் கூடாது என்றும் கண்டிப்புடன் கூறியுள்ளாராம்.

எல்லாம்.. ரஜினிக்கு குசேலன் தந்த பாடம் தான் காரணம்..

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X