'யாரும் செட் ஆகல!'... புதிய ஹீரோயின் தேடும் சிம்பு!!
தனது அடுத்த படத்துக்காக ஹீரோயின் வேட்டையில் இறங்கியுள்ளார் நடிகர் சிம்பு.
இந்தியில் வெற்றி பெற்ற தபாங் படத்தை தமிழில் ரீமேக் செய்கிறார் சிம்பு. இந்தப் படத்தை இயக்குபவர் அடுத்தடுத்து அதிரடி வெற்றிப் படங்களைத் தந்த தரணி.
இந்தப் படத்துக்காக முதலில் காஜல் அகர்வாலிடம் பேசினர். ஆனால் சிம்புவுக்கு அவரைப் பிடிக்கவில்லை. எனவே இந்தி நடிகை சோனம் கபூரை வரவழைக்க முடிவு செய்தனர். ஆனால் சோனம் கபூரின் தந்தை அனில் கபூரோ, தன் மகள் இந்தியிலேயே நன்றாக செட்டிலாகட்டும் என்று கூறிவிட்டாராம்.
எனவே இப்போது புதிய நாயகியை தேடி வருகிறார்கள் சிம்புவும் தரணியும். இலியானா, அனுஷ்கா என இங்கிருக்கும் நடிகைகளிடமே போகலாம் என்றால் அவர்களிடம் உடனடி கால்ஷீட் கிடைப்பது கஷ்டமாக உள்ளதாம்.
என்னடா இந்த மன்மதனுக்கு வந்த சோதனை என நொந்து கொண்ட சிம்பு, பாரதிராஜா ஸ்டைலில் கல்லூரி கல்லூரியாக தன் ஹீரோயினைத் தேடிக் கொண்டுள்ளாராம்.
எதுக்கும் நல்ல ஆல்பத்தோடு சிம்புவை அணுகுங்க... அவர் தேடும் நாயகி உங்களில் ஒருவராகவும் இருக்கலாம்!


Click it and Unblock the Notifications











