விஜயதசமியன்று ஏகன் பாட்டு!

இதுகுறித்து ஐங்கரன் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
அய்ங்கரன் முதல் தயாரிப்பாக வெளிவரும் ஏகன் திரைப்படத்தில் அஜீத், நயனதாரா ஜோடியாக நடித்துள்ளனர்.
யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ள இந்தப் படத்தின் பாடல்கள் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளன.
பாடல் வெளியீட்டை அக்டோபர் முதல் தேதியன்று வெளியிடும் திட்டத்திலிருந்தது அய்ங்கரன் நிறுவனம்.
ஆனால் முதல் திரைப்படம் என்பதால், நல்ல நாளான விஜயதசமியன்று வெளியிடலாம் என நாயகன் அஜீத் தெரிவித்த யோசனையை ஏற்றுக் கொண்ட அய்ங்கரன் தற்போது அதற்கான ஏற்பாடுகளில் மும்முரமாக இறங்கியுள்ளது.
ஏகன் படப்பிடிப்பு கிட்டத்தட்ட முடிவடையும் கட்டத்தை நெருங்கிவிட்டது. இன்னும் ஒரு பாடல் படமாக்கப்பட வேண்டியுள்ளது. அது முடிந்ததும் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் துவங்கும்.
தீபாவளி சரவெடியாக வருகிறது ஏகன்.


Click it and Unblock the Notifications











