வீட்டு வசதி வாரிய நிலம வாங்கியதில் மோசடி- விஜய்க்கு நோட்டீஸ்

Vijay
சென்னை: தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் நடிகர் விஜய்க்கு ஒதுக்கீடு செய்த நிலம் தொடர்பாக தொடரப்பட்ட வழக்கில் நடிகர் விஜய், வீட்டு வசதி வாரியம் ஆகியோர் நவம்பர் 9ம் தேதிககுள் விளக்கம் அளிக்குமாறு கூறி நோட்டீஸ் அனுப்ப உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை ஷெனாய் நகரை சேர்ந்த கார்த்திகேயன் என்பவர், சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒரு வழக்கைத் தாக்கல் செய்துள்ளார்.

அதில், நடிகர் விஜய்க்கு கொரட்டூரில் தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் சுமார் 5 கிரவுண்டு நிலம் ஒதுக்கீடு செய்துள்ளது.

விஜய்க்கு தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் நிலம் ஒதுக்கீடு செய்தது சட்ட விரோதம். இதற்கான வீட்டு வசதி வாரியத்தின் உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்று கோரியிருந்தார்.

இந்த மனு நீதிபதி ஜோதிமணி முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் வழக்கறிஞர் எம்.வி.முரளீதரன் ஆஜராகி வாதிட்டார்.

அப்போது மனுதாரரின் தந்தையிடம் இருந்து கொரட்டூரில் வீட்டு வசதி வாரியம் ஆர்ஜிதம் செய்த நிலத்தில் 0.27 ஏக்கர் நிலம், அதாவது சுமார் 5 கிரவுண்டு நிலம் நடிகர் விஜய்க்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த நிலம் 2004ம் ஆண்டு திராவிடியன் பஞ்சாயத்துக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டது.

அவர்களுக்கு ஒதுக்கிய நிலத்தை அதன் பிறகு 2007ம் ஆண்டு நடிகர் விஜய்க்கு தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் எப்படி ஒதுக்கீடு செய்ய முடியும்.

இந்த விஷயத்தில் தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் பொய்யான தகவல்களை தெரிவித்திருக்கிறது. எனவே நடிகர் விஜய்க்கு 5 கிரவுண்டு நிலம் ஒதுக்கீடு செய்ததை ரத்து செய்ய வேண்டும் என்று வாதிட்டார்.

வீட்டு வசதி வாரியத்தின் சார்பில் ஆஜரான வக்கீல் யாருக்கு, எவ்வளவு நிலம் ஒதுக்க வேண்டும் என்பது அரசாங்கத்திற்கு உள்ள அதிகாரம் என்றார்.

வாதங்களைக் கேட்ட நீதிபதி, 2004ம் ஆண்டு திராவிடியன் பஞ்சாயத்துக்கு ஒதுக்கிய அதே நிலத்தை 2007ம் ஆண்டு மீண்டும் எப்படி நடிகர் விஜய்க்கு தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் ஒதுக்கீடு செய்ய முடியும் என்று கேள்வி எழுப்பினார்.

அதன் பின்னர் விஜய், வீட்டு வசதி வாரியம் ஆகிய இரு தரப்பும் நவம்பர் 9ம் தேதிக்குள் விளக்கம் அளிக்குமாறு கூறி நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X