twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    நிஜத்தில் ஹீரோவான கன்னட நடிகர் ஜக்கேஷ்...2 செயின் திருடர்களை விரட்டிப் பிடித்தார்!

    By Shankar
    |

    Jaggesh
    பெங்களூர்: இரண்டு செயின் பறிப்புத் திருடர்களை மோட்டார் சைக்கிளில் போய் விரட்டிப் பிடித்து பொதுமக்களிடம் பாராட்டுப் பெற்றுள்ளார் பிரபல கன்னட நடிகர் ஜக்கேஷ்.

    நேற்று மாலை பெங்களூர் மல்லேஸ்வரத்தில் இந்த சம்பவம் நடந்தது.

    கன்னட சினிமாவில் பிரபல நகைச்சுவை - குணச்சித்திர நடிகராக இருப்பவர் ஜக்கேஷ்.

    மாலை 5.30 மணியளவில், 18வது க்ராஸ் சாலையில் உள்ள தனது வீட்டுக்கு வெளியே நின்று கொண்டு மொபைலில் பேசிக் கொண்டிருந்தார் நடிகர் ஜக்கேஷ்.

    அப்போது சாலையிலஸ் ஒரு பெண் கதறிக் கொண்டும், காப்பாற்றக் கோரியும் சத்தமெழுப்பியது அவர் காதில் விழுந்தது. உடனே சாலையில் எட்டிப் பார்த்தார். அப்போது ஒரு 17 வயது பெண்ணின் கழுத்திலிருந்த தங்கச் சங்கிலியை, பைக்கில் வந்த இரு வாலிபர்கள் பறிக்க முயற்சித்துக் கொண்டிருந்தனர். அந்தப் பெண்ணோ சங்கிலியை விடாமல் கெட்டியாகப் பிடித்துக் கொண்டு கதறினாள்.

    கிட்டத்தட்ட 20 அடி தூரம் ரோடில் அந்தப் பெண்ணை இழுத்துக் கொண்டே போயிருக்கிறார்கள். அப்படியும் விடவில்லை. உடனே அந்தத் திருடர்களில் ஒருவன் பெண்ணை தள்ளிவிட்டு சங்கிலியைப் பறிக்க பைக் பறந்தது. அதற்குள் அந்தப் பெண்ணருகில் ஓடிவந்த ஜக்கேஷ், நடந்ததைப் புரிந்து கொண்டு, போலீசுக்கு தகவல் கொடுக்குமாறு அருகிலிருந்தவர்களிடம் சொன்னார்.

    மேற்கொண்டு நடந்ததை அவரே சொல்கிறார்:

    " அந்தப் பக்கம் பைக்கில் வந்த ஒருவரை நிறுத்தி விஷயத்தைச் சொல்லி பைக் கேட்டேன். அவரும் மறு பேச்சின்றி உடனே தந்தார். அடுத்த நொடி நான் பறந்தேன் பைக்கில். எனக்கும் அவர்களுக்கும் 500 மீட்டர் கேப். வேகமாகப் போய், அவர்கள் பைக்குக்கு முன் நான் மறிக்க அவர்கள் இருவரும் கீழே விழுந்தார்கள். இருவரையும் பலமாகப் பிடித்துக் கொண்டேன். ஒருவன் மட்டும் சங்கிலியை கெட்டியாகப் பிடித்துக் கொண்டிருந்தான். அவனிடமிருந்து செயினை கைப்பற்றினேன். அந்தப் பெண்ணிடம் அந்த செயினை ஒப்படைத்தபோது, அவள் அடைந்த நிம்மதியும் சந்தோஷமும் இதற்கு முன் பார்க்காதது," என்றார்.

    ஆரம்பத்தில் இது ஏதோ சினிமா ஷூட்டிங் என நினைத்துவிட்டார்களாம் மக்கள். அவர்களிடம் கன்னடத்தில் "இது ஷூட்டிங் அல்ல' என்று பல முறை விளக்கிக் கூறவேண்டியிருந்ததாம். விஷயம் புரிந்ததும், அசந்துபோய் ஜக்கேஷைப் பாராட்டினார்களாம் பொதுமக்கள்.

    பின்னர் வழக்கம்போல போலீஸ் கடைசியில் வந்து, திருடர்கள் இருவரையும் பிடித்துள்ளது. பிடிபட்ட இரு இளைஞர்களும் கல்லூரி மாணவர்கள் என்பது பின்னர் தெரிய வந்தது.

    "ஒரு இளைஞன் ஆஸ்டின் கல்லூரியில் பியூசி படிப்பவன். இன்னொரு இளைஞர் ஷேசாத்ரிபுரம் கல்லூரியில் பியூசி படிக்கிறான்," என்றார் இந்த வழக்கை விசாரிக்கும் பெங்களூர் துணை கமிஷனர் ரேவண்ணா.

    ஜக்கேஷ் இதுபோல நிஜத்திலும் உதவுவது இது முதல் முறை அல்ல. ஏற்கெனவே பெங்களூர் ரயில் நிலையத்தில், ஓடும் ரயிலில் ஏற முயன்றி தவறி ட்ராக்கில் விழவிருந்த ஒருவரை, பாய்ந்து சென்று காப்பாற்றியுள்ளார் ஜக்கேஷ்.

    English summary
    Popular Kannada actor and politician Jaggesh became a real life hero by nabbing two chain-snatchers while they were trying to snatch the gold chain of a 17 year-old girl in front of his house near here today, police said. The two II year PUC students of a private college were caught red-handed by Jaggesh and some other youths after a chase, Deputy Commissioner of Police (North Division), H Revanna said. The gold chain was also recovered.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X