ஜீவனுக்கு 'ஆள்' இல்லை!

கே.பாலச்சந்தரின் கவிதாலயா தயாரிப்பில், ஸெல்வன் இயக்கத்தில் உருவாகும் படம் கிருஷ்ண லீலை. இதில் ஜீவன் ஹீரோவாக நடிக்கிறார். அவருக்கு சரியான ஜோடி இதுவரை அகப்படவில்லையாம்.
பல முன்னணி, பின்னணி ஹீரோயின்களை இதுதொடர்பாக பரிசீலித்து விட்டார்களாம். ஆனாலும் யாரும் ஸெல்வன் எதிர்பார்த்த ரேஞ்சுக்குள் வரவில்லை. இதனால் சலித்துப் போன ஸெல்வன் தற்போது விதிஷா, காவேரிஜா ஆகிய இரு ஹீரோயின்களைப் பார்த்து வைத்துள்ளார்.
விதிஷா தற்போது கரணுடன் காத்தவராயன் படத்தில் ஜோடி போட்டு கலக்கிக் கொண்டிருக்கிறார். கிளாமருக்கு முகம் சுளிக்காத சமர்த்துப் பெண் விதிஷா என்கிறார்கள் கோலிவுட்டில்.
ஜீவனுடன் அவர் ஜோடி சேருவாரா என்பது இன்னும் உறுதியாகத் தெரியவில்லை. விதிஷாவையும், காவேரி ஜாவையும் பரிசீலனையில் வைத்துள்ள ஸெல்வன் சில மும்பை மாடல்களையும் கூப்பிட்டு டெஸ்ட் பார்த்துள்ளாராம். இவர்களில் யார் தேறப் போவது என்று தெரியவில்லை.
ஸெல்வனின் ஹீரோயின் தேடும் படலத்தை வைத்தே ஒரு படம் எடுத்து விடலாம் போலிருக்கிறதே!


Click it and Unblock the Notifications











