twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    ஜீவனுக்கு 'ஆள்' இல்லை!

    By Staff
    |

    Priyamani with Jeevan
    கே.பாலச்சந்தர் தயாரிப்பில் உருவாகவுள்ள கிருஷ்ண லீலை படத்தில் ஜீவனுக்கு ஜோடியாக நடிக்க ஆள் கிடைக்காமல் பெரும் அவஸ்தை ஏற்பட்டுள்ளதாம்.

    கே.பாலச்சந்தரின் கவிதாலயா தயாரிப்பில், ஸெல்வன் இயக்கத்தில் உருவாகும் படம் கிருஷ்ண லீலை. இதில் ஜீவன் ஹீரோவாக நடிக்கிறார். அவருக்கு சரியான ஜோடி இதுவரை அகப்படவில்லையாம்.

    பல முன்னணி, பின்னணி ஹீரோயின்களை இதுதொடர்பாக பரிசீலித்து விட்டார்களாம். ஆனாலும் யாரும் ஸெல்வன் எதிர்பார்த்த ரேஞ்சுக்குள் வரவில்லை. இதனால் சலித்துப் போன ஸெல்வன் தற்போது விதிஷா, காவேரிஜா ஆகிய இரு ஹீரோயின்களைப் பார்த்து வைத்துள்ளார்.

    விதிஷா தற்போது கரணுடன் காத்தவராயன் படத்தில் ஜோடி போட்டு கலக்கிக் கொண்டிருக்கிறார். கிளாமருக்கு முகம் சுளிக்காத சமர்த்துப் பெண் விதிஷா என்கிறார்கள் கோலிவுட்டில்.

    ஜீவனுடன் அவர் ஜோடி சேருவாரா என்பது இன்னும் உறுதியாகத் தெரியவில்லை. விதிஷாவையும், காவேரி ஜாவையும் பரிசீலனையில் வைத்துள்ள ஸெல்வன் சில மும்பை மாடல்களையும் கூப்பிட்டு டெஸ்ட் பார்த்துள்ளாராம். இவர்களில் யார் தேறப் போவது என்று தெரியவில்லை.

    ஸெல்வனின் ஹீரோயின் தேடும் படலத்தை வைத்தே ஒரு படம் எடுத்து விடலாம் போலிருக்கிறதே!

    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X