50 ஆதரவற்றோருக்கு கமல் மின் விசிறி

சென்னை, கோவை, ஆத்தூர், சேலம், ராசிபுரம், கும்முடிப்பூணடி, பொன்னேரி, பெங்களூர் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த 50 முதியோர் இல்லங்கள், ஆதரவற்றோர் ஆசிரமங்களை தேரந்தெடுத்து இந்த மின் விசிறிகளை வழங்கியுள்ளது தமிழக கமல்ஹாசன் நற்பணி இயக்கம்.
ஆழ்வார்பேட்டையில் உள்ள கமல்ஹாசனின் அலுவலகத்தில் நடந்த எளிய விழாவில் இந்த மின் விசிறிகள் வழங்கப்பட்டன.
கமல்ஹாசன் நற்பணி இயக்கத்தின் நிர்வாகி ரா.குணசீலன், மக்கள் தொடர்பாளர் நிகில் முருகன் ஆகியோர் இதற்கான ஏற்பாடுகளைச் செய்திருந்தனர். அவற்றை இல்ல-ஆசிரம நிர்வாகிகள் பெற்றுக் கொண்டனர்.
தென் சென்னை மாவட்டத்தைச் சேர்ந்த கமல் நற்பணி இயக்க நிர்வாகி ஜான், கோவை தங்கவேலு, ஏழுமலை, ராயபுரம் சங்கர் உள்ளிட்டோர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
ஐம்பதாவது நாள் வெற்றி விழாவுக்கு ஃபேன், அப்ப நூறாவது நாளுக்கு?


Click it and Unblock the Notifications











