கமலின் ஒரு கோடி ரூபாய் திட்டம்

By Staff

Kamal
தனது அடுத்த படமான மர்மயோகியின் ஆரம்பமே மிரட்டலாக இருக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கும் உலக நாயகன் கமல்ஹாசன், அதற்காக 1 கோடி ரூபாய் செலவழித்து பிரமாண்ட துவக்க விழா நடத்த முடிவு செய்துள்ளார்.

இந்த விஷயம் முடிவானதும் அவர் முதலில் தனது தயாரிப்பாளர்களான பிரமிட் சாய்மிராவிடம் தன் திட்டத்தையும் பட்ஜெட்டையும் கூறிவிட்டார். இதைக் கேட்டு, ஒரு கோடியா... இதில் ஒரு படமே எடுத்துவிடலாமே என ஒரு கணம் மலைத்துப் போனாலும், கேட்பது கமல்ஹாசனாயிற்றே என்பதால் மறுபேச்சின்றி ஒப்புக் கொண்டார்களாம்.

ஆக, தனது அடுத்த படத்தை மும்பையில் தன்னுடைய திட்டப்படி ரூ.1 கோடி செலவில் பிரமாண்டமாகத் துவக்குகிறார் கமல்ஹாசன். அமிதாப் பச்சன், தர்மேந்திரா, ஷாரூக்கான் என பாலிவுட் பிரபலங்கள் பங்கேற்கும் இந்த துவக்க விழா, கிராண்ட் ஓட்டலில் நடக்கிறது.

இந்த துவக்க விழாவிலேயே, படத்தில் பங்கு பெறும் கலைஞர்கள், படப்பிடிப்புக் குழு, மற்றும் படப்பிடிப்பு நடக்கப் போகிற இடங்கள் போன்றவற்றை ஒரு சுவாரஸ்யமான குறும்படமாகக் காட்டும் திட்டத்திலிருக்கிறாராம் கமல்.

ஹேமமாலினி, கஜோல் என பாலிவுட் நட்சத்திரங்கள் நடிக்கவிருக்கும் இந்த சரித்திப் படத்தின் படப்பிடிப்பை எத்தியோப்பியா உள்ளிட்ட சில ஆப்பிரிக்க நாடுகளில் நடத்தும் திட்டத்திலிருக்கிறார் கமல்.

அடுத்த அசத்தல் ஆரம்பம்?

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X