மீண்டும் தமிழில் மம்முட்டி

மலையாள சூப்பர் ஸ்டார்களான மோகன்லால் மற்றும் மம்முட்டி ஆகிய இருவரும் தமிழிலும் நடித்த அனுபவம் கொண்டவர்கள். இருப்பினும் மோகன்லாலை விட மம்முட்டியே தமிழிலும் நடிகராக அங்கீகரிக்கப்பட்டார் ரசிகர்களால்.
ஏராளமான தமிழ்ப் படங்களில் நடித்துள்ள மம்முட்டி சமீப காலமாக தமிழில் அதிகம் நடிக்கவில்லை. முற்றிலும் மலையாளத்திலேயே பிசியாக இருந்து வந்தார். இந்த நிலையில் பெரிய இடைவெளிக்குப் பின்னர் மீண்டும் தமிழுக்கு வருகிறார் மம்முட்டி.
வல்லமை தாராயோ படத்தை தயாரித்த திரிசக்தி சுந்தரராமன் அடுத்து தயாரிக்கவுள்ள படத்தில் சரத்குமாரும், மம்முட்டியும் இணைந்து நடிக்கவுள்ளனர்
இரு தொழிலதிபர்கள் குறித்த கதையாகும் இது. இப்படத்தை சஞ்சய் ராம் இயக்குகிறார். அடுத்த ஆண்டு தொடக்கத்தில் படப்பிடிப்பைத் தொடங்கவுள்ளனராம்.
படப்பிடிப்பு முழுக்க முழுக்க வெளிநாடுகளிலேயே நடக்கிறதாம்.
Comments


Click it and Unblock the Notifications