அட்லீயுடன் இணையும் படம்.. அல்லு அர்ஜுன் சம்பளம் இவ்வளவா?.. ஆத்தாடி தலையே சுத்துதே
சென்னை: தமிழ் சினிமாவில் இயக்குநர் பயணத்தை தொடங்கிய அட்லீ இப்போது இந்திய அளவில் சக்சஸ்ஃபுல் இயக்குநர். கடைசியாக ஷாருக்கானை வைத்து ஜவான் படத்தை இயக்கி வெற்றி கண்ட அவர்; அடுத்ததாக அல்லு அர்ஜுனை வைத்து இயக்குகிறார். இதற்கு தற்காலிகமாக AA22XA6 என்று பெயர் வைக்கப்பட்டிருக்கிறது. இதில் தீபிகா படுகோனே உள்ளிட்டோர் நடிக்கிறார்கள். இந்நிலையில் புதிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.
ராஜா ராணி படத்தை இயக்கி இயக்குநராக அறிமுகமான அட்லீ வரிசையாக தமிழில் விஜய்யை வைத்து மட்டுமே படங்களை இயக்கினார். அப்படி அவர் இயக்கிய படங்களில் பிகில் தவிர்த்து அத்தனை படங்களும் ஒன்று சூப்பர் டூப்பர் ஹிட்டடித்தன அல்லது மெகா ப்ளாக் பஸ்டர் ஆகின. வரிசையாக அவர் வெற்றியை கொடுத்தாலும்; அட்லீ சொந்தமாக கதையை யோசிப்பதே இல்லை; மற்ற படங்களிலிருந்து காப்பி அடிக்கிறார் என்ற விமர்சனம் வந்தது. அதற்கு அட்லீயும் தரமான பதிலடியை கொடுத்திருந்தார்.
சூப்பர் இயக்குநர்: அதேசமயம் கதையை காப்பி அடித்தாலும் மேக்கிங்கில் பட்டையை கிளப்பிவிடுகிறார் என்ற பாராட்டும் எழாமல் இல்லை. அவர் வைக்கும் ஃப்ரேம்கள் எப்போதுமே ரிச்சாகவும், பார்ப்பதற்கு அவ்வளவு அழகாகவும் இருக்கும். அதனால்தான் ஒரு இயக்குநராக சினிமாவில் விமர்சனங்களை சந்தித்தாலும் நீடிக்க முடிகிறது என்று பலர் சொல்வதுண்டு. தமிழில் விஜய்யை தவிர்த்து வேறு யாருடனும் பணியாற்றமாட்டாரா என்று கேள்வி எழும் அளவுக்கு விஜய்யின் குட் புக்கில் இருந்தார்.

ஹிந்தியில் அட்லீ: இப்படிப்பட்ட சூழலில் அனைவருக்கும் சர்ப்ரைஸ் கொடுக்கும் விதமாக கோலிவுட்டில் சில படங்களை இயக்கிவிட்டு நேரடியாக பாலிவுட்டுக்கு சென்றுவிட்டார். முதல் படத்திலேயே பாலிவுட் பாட்ஷா என்று அழைக்கப்படும் ஷாருக்கானை இயக்கினார். ஷாருக்கான் மட்டுமின்றி பெரிய நட்சத்திர பட்டாளத்தை வைத்து ஜவான் படத்தை இயக்கியிருந்தார். சில வருடங்களுக்கு முன்பு வெளியான அப்படம் உலகம் முழுவதும் ஆயிரம் கோடி ரூபாய்க்கும் மேல் வசூலித்து; அட்லீயின் மார்க்கெட்டை பாலிவுட்டிலும் எக்குத்தப்பாக உயர்த்தி வைத்தது.
அல்லு அர்ஜுனுடன் படம்: ஜவானை தொடர்ந்து இப்போது அல்லு அர்ஜுனை வைத்து படம் இயக்குகிறார். இதனை சன் பிக்சர்ஸ் நிறுவனம் பிரமாண்டமான பட்ஜெட்டில் தயாரிக்கிறது. சைன்ஸ் ஃபிக்ஷன் அல்லது சூப்பர் ஹீரோ ஜானரில் இந்தப் படம் உருவாகலாம் என்று தெரிகிறது. இதில் தீபிகா படுகோனே உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடிக்க கமிட்டாகியிருக்கிறார்கள். படத்தின் சில பணிகளில் ஹாலிவுட் கலைஞர்களும் ஈடுபட்டிருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
அல்லு அர்ஜுன் சம்பளம்: அல்லு அர்ஜுனுக்கு புஷ்பா, புஷ்பா 2 என வரிசையாக ஹிட்டுகள் கிடைத்திருக்கின்றன. எனவே அதே வைபை அட்லீ இயக்கத்தில் உருவாகும் படத்திலும் பெற்றுவிடலாம் என்று உச்சபட்ச நம்பிக்கையில் இருக்கிறார். இந்நிலையில் இப்படத்துக்காக அவர் சம்பளமாக முப்பது சதவீதம்வரை லாபத்தில் பங்கு கேட்டிருப்பதாகவும்; அதை தருவதற்கு சன் பிக்சர்ஸ் நிறுவனமும் ஒத்துக்கொண்டுவிட்டது என்று தகவல்கள் வட்டமடிக்கின்றன.


Click it and Unblock the Notifications











