ராகவேந்திரர் கோயில் திறக்கும் ரஜினி!

சென்னையை அடுத்த அம்பத்தூரில் பகவான் ராகவேந்திரருக்கு, பலரது நன்கொடை மூலம் ஒரு கோவிலைக் கட்டி வருகிறார் ராகவா லாரன்ஸ்.
நீண்ட நாட்களாக இக்கோவில் கட்டும் பணிகள் நடந்து வந்தன. தற்போது வேலை முடியும் தருவாயில் உள்ளது. இந்த கோவில் திறப்பு விழா ஆகஸ்டு மாதம் நடக்கிறது. சூப்பர் ஸ்டார் ரஜினி இக்கோயிலைத் திறந்து வைக்கிறார்.
இதுகுறித்து ராகவா லாரன்ஸ் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:
அம்பத்தூரில் கட்டப்பட்டு வரும் ராகவேந்திரா கோவிலை ரஜினி சாரை வைத்துதான் திறக்க வேண்டும் என விரும்பினேன். இதுபற்றி அவரிடம் சொல்லி அழைத்தேன்.
என் அழைப்பை ரஜினி சாரும் உடனே ஏற்றுக் கொண்டார். ஆகஸ்ட் மாதம்தான் ராகவேந்திரர் ஜீவசமாதி அடைந்த தினம் வருகிறது. அதே நாளில் திறப்பு விழா நடத்த திட்டமிட்டுள்ளேன். சூப்பர் ஸ்டார் ரஜினி நேரில் வந்து திறக்கிறார், என்றார்.
ஏற்கெனவே ராகவா லாரன்ஸ் நடத்தும் ஆதரவற்ற குழந்தைகள் அறக்கட்டளைக்காக ரஜினியும், அவரது மகள் சௌந்தர்யா ரஜினியும் தொடர்ந்து உதவிகள் செய்து வருவது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











