ரசிகர்களோடு படம் பார்க்கும் ரஜினி!

By Staff

Rajini in Kuselan
குசேலன் திரைப்படத்தை சென்னையில் திரையரங்கில் ரசிகர்களோடு அமர்ந்து பார்க்க விருப்பம் தெரிவித்துள்ளார் சூப்பர் ஸ்டார் ரஜினி.

ரஜினி நாயகனாக நடிக்கும் குசேலன் திரைப்படத்தின் அனைத்து வேலைகளும் முடிந்து விட்டன. கடைசி பாடலை மட்டும் எடுக்காமல் விட்டிருந்தார் வாசு.

விஜய், அஜீத். சூர்யா, மற்றும் விக்ரம் உள்ளிட்ட முன்னணி இளம் நடிகர்கள் பங்கேற்கும் விதத்தில் இந்தப் பாடலை படு கிராண்டாக எடுக்க வேண்டும் என்பது வாசுவின் விருப்பம்.

ஆனால் ஆரம்பத்திலேயே இந்த ஐடியாவை மறுபரிசீலனை செய்யச் சொல்லியிருந்தாராம் ரஜினி.

எனக்காக வந்து நடித்துக் கொடுங்கள் என்று யாரிடமும் கேட்காதீர்கள். அவர்கள் என்ன சூழ்நிலையில் இருப்பார்களோ... எந்த விதத்திலும் என்னால் தொவந்தரவு வேண்டாம் என்று வாசுவிடம் கூறியிருந்தாராம். இதனால் சினிமா சினிமா... எனும் பாடலில் ரஜினி வெள்ளைக் குதிரையில் ரஜினி அமர்ந்து வருவது போல காட்சிகளை எடுத்துவிட்டு, பாதிப் பாடலை மட்டும் ஷூட் செய்யாமல் வைத்திருந்தாராம் வாசு.

இந்நிலையில், படம் முழுவதுமாக முடிந்த பிறகு இரண்டு நிமிட நேர பாடல் காட்சிகளை மட்டும் திட்டமிட்டபடி விஜய், விக்ரம், சூர்யா மற்றும் அஜீத்தை வைத்து எடுக்கலாம் என அவர்களை அணுகியுள்ளார்.

ஆனால் எங்களைக் கேட்காமல் நீங்கள் எப்படி பத்திரிகைகளில் இதுகுறித்த செய்திகளை வெளியிடலாம். இதனால் எங்களுக்குதான் மன உளைச்சல். ரஜினி சாருடன் நடிக்க மறுப்பு என செய்திகள் வந்தால் எங்களுக்குத்தானே கெட்ட பெயர் என அதிருப்தி தெரிவித்துள்ளனர்.

நொந்து போன வாசு சைலண்டாக அந்த ஐடியாவையே டிராப் செய்துவிட்டு, விஷயத்தை ரஜினியிடம் கூறினாராம்.

நான்தான் அப்பவே சொன்னேனே... சரி, என் ரசிகர் மன்றத்தினரை வைத்து அந்தப் பாடலை முடித்துவிடலாம் என ரஜினி கூற, அப்படியே எடுக்கப்பட்டது.

ரசிகர்களுடன்...:

சாந்தி திரையரங்கில் ரஜினியின் குசேலன் திரையிடப்பட்டிருப்பது போலவும், தியேட்டருக்கு முன் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் ரஜினியின் கட் அவுட்டுக்குப் பாலாபிஷேகம் செய்வது, ஆரத்தி எடுப்பது போன்ற காட்சிகள் எடுக்கப்பட்டன.

பின்னர் நம்மிடம் பேசிய வாசு, ரஜினி சார் ஒரு விஷயத்தைச் சொன்னால், செய்தால் மிகச் சரியாக இருக்கும் என்பதற்கு இந்தச் சம்பவம் ஒரு உதாரணம். இந்தப் படத்துக்கு இன்னும் சிறப்பு சேர்க்கத்தான் அப்படியொரு நட்சத்திரப் பாட்டு ஐடியா வைத்திருந்தேன். துரதிருஷ்டவசமாக அப்படி நடக்கவில்லை. யாரையும் இதற்காக நான் குறை சொல்லவில்லை.

ஆனால், ரஜினி சார் சொன்னது போல, இப்போதுதான் அந்தப் பாடலுக்கு சரியான ஃபினிஷிங் கிடைத்துள்ளது.

இந்தப் படத்தை ரசிகர்களுடன் அமர்ந்து திரையரங்கில்தான் முவுமையாகப் பார்க்கப் போகிறார் ரஜினி சார். இதை அவரே சொன்னார். தன் ரசிகர்களோடு படம் பார்த்து நீண்ட வருடங்கள் ஆகிவிட்டது. எனவே முதல் காட்சியில் அவர்களோடு பார்க்கத் திட்டம் வைத்துள்ளேன். மாறு வேடத்தில் அல்ல, ரஜினிகாந்தாகவே பார்க்கப் போகிறேன் என்று கூறியிருக்கிறார் ரஜினி சார், என்றார் வாசு.

இன்று பாடல் வெளியீடு:

இதற்கிடையே, குசேலன் படத்தின் பாடல்கள் இன்று சென்னை ராயல் லீ மெரிடியனில் வெளியிடப்படுகின்றன.

இப் படத்தின் தெலுங்குப் பதிப்பான கதாநாயகுடு பாடல்களும் சென்னையிலேயே வெளியிடப்படுகின்றன. முதல் ஆடியோ சிடியை கே.பாலசந்தர் வெளியிட ரஜினி பெற்றுக் கொள்கிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X