ரித்தீஷ் 'சீரியல்' - மீனா ஹீரோயின்!

ராமநாதபுரத்து ஹீரோ ரித்தீஷ். அமைச்சர் சுப. தங்கவேலனின் பேரன்.
பெரிய பெரிய படங்களே படாதபாடு பட்டுக் கொண்டிருந்த நிலையில் தனது நாயகன் படத்தை அட்டகாசமான வெற்றிப் படமாக்கிக் காட்டி அனைவரையும் அசரடித்தார். 100 நாட்களையும் தொட்டது இந்தப் படம்.
இப்போது ரித்தீஷை சுற்றி ஏகப்பட்ட இளம் இயக்குநர்கள் தங்களது படத்தை தயாரித்து, நடித்துத் தருமாறு கேட்டுக் கொண்டிருக்கிறார்கள்.
தற்போது கை நிறையப் படங்களுடன் இருக்கும் ரித்தீஷ், அதில் எது மார்க்கெட் ரீதியாக வசூலைத் தரும் என்பதை பரிசீலித்து அதன்படி நடிக்கப் போகிறாராம்.
இந்த நிலையில் சைட் பை சைடாக டிவி சீரியலுக்கும் வருகிறார் ரித்தீஷ். விரைவில் ஒரு மெகா தொடரை அவர் தயாரிக்கப் போகிறார். இதில் நாயகியாக மீனா நடிக்கவுள்ளதாக தெரிகிறது.
விரைவில் இதுகுறித்த அறிவிப்பை ரித்தீஷ் வெளியிடவுள்ளாராம்.
சினிமாவில் பெற்ற வெற்றியை டிவியிலும் நிலை நாட்டுவாரா ரித்தீஷ்.


Click it and Unblock the Notifications











