ஷாருக் வீட்டில் சல்மான் கலாட்டா!

By Staff

Salman Khan, Shah Rukh Khan and Katrina Kaif
முன்பு ஐஸ்வர்யா ராய் வீட்டுக்கு நள்ளிரவில் போய் வெளியே நின்று கதவைத் தட்டி அமர்க்களம் செய்தது போல, ஷாருக்கான் வீட்டுக்குப் போய், ரகளை செய்து அவரது மனைவியின் பெயரைச் சொல்லி மிரட்டியும், தைரியமாக இருந்தால் வெளியே வா என்று ஷாருக்குக்கு சவால் விட்டும் அமளியை ஏற்படுத்தியுள்ளார் சல்மான் கான்.

சர்ச்சை என்கிற சல்மான் கான் என்று சல்மானுக்கு பெயரை மாற்றி வைத்து விடலாம். அந்த அளவுக்கு அவரும், சர்ச்சையும் சரமாரியாக நட்பு பாராட்டி வருகிறார்கள்.

முன்பு ஐஸ்வர்யா ராயை அவர் காதலித்துக் கொண்டிருந்த ஏகப்பட்ட சர்ச்சைகளில் சிக்கினார். ஐஸ்வர் யாராய் வீட்டுக்கு நள்ளிரவில், நல்ல மப்பில் சென்று ஏடாகூடமாக பேசி ரகளை செய்தார்.

பின்னர் மான் வேட்டையாடி சிக்கி சிறை சென்று தற்போது ஜாமீனில் வந்திருக்கிறார். இந்த நிலையில், மறுபடியும் ஒரு மெகா சர்ச்சையில் சிக்கியுள்ளார் சல்மான்.

ஐஸ்வர்யாவை விட்ட பின்னர் சல்மானின் காதலியாக காத்ரீனா கைப் மாறினார். இருவரும் இணை பிரியாமல் இருந்து வருகின்றனர். சமீபத்தில், காத்ரீனா தனது பிறந்த நாளைக் கொண்டாடினார். இதையொட்டி பார்ட்டிக்கும் ஏற்பாடு செய்திருந்தார்.

பார்ட்டிக்கு திரையுலகைச் சேர்ந்த பலரையும் அழைத்திருந்தார். அவர்களில் ஷாருக் கானும் ஒருவர்.

காத்ரீனாவின் வீட்டில் பார்ட்டி நடந்து கொண்டிருந்தபோது திடீரென ஷாருக்குடன் 'ஒரண்டை' (அதாவது வம்பு) இழுத்துள்ளார் சல்மான். இதனால் ஷாருக் உள்பட அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர். சண்டை வேண்டாம் என விலகிப் போக நினைத்தார் ஷாருக். இருந்தாலும் சல்மான் ரசாபாசமாக பேசி அவருடன் சண்டை போடவே, பதிலுக்கு ஷாருக்கும் கோபமாக பேசியுள்ளார்.

இதையடுத்து ஷாருக் மீது பாய எத்தனித்தார் சல்மான். உடன் இருந்தவர்கள் ஆளுக்கு ஒரு கானாக பிடித்து இழுத்து சண்டையைத் தவிர்த்து, ஷாருக்கை அங்கிருந்து பத்திரமாக அனுப்பி வைத்தனர்.

சல்மான் கானின் செயலால் காத்ரீனா பெரும் அதிர்ச்சியும், அதிருப்தியும் அடைந்தார்.

விவகாரம் அத்தோடு முடியவில்லை. கடந்த திங்கள்கிழமை நள்ளிரவில், ஷாருக் வீட்டுக்கு காரை விட்டுள்ளார் சல்மான். காரை வெளியே நிறுத்தி விட்டு வீட்டுக்குள் நுழைய பார்த்தார். ஆனால் வெளியே இருந்த கூர்க்காக்கள் அவரை தடுத்துள்ளனர்.

இதனால் வெளியில் இருந்தபடியே ஷாருக், தைரியம் இருந்தால் வெளியே, நீயா, நானா பார்த்து விடலாம் என கோபமாக கத்தியுள்ளார். அத்தோடு ஷாருக்கின் மனைவி கெளரி கானின் பெயரைச் சொல்லி அழைத்து திட்டியுள்ளார்.

வெளியே இருந்த கூர்க்காக்கள் நிலைமை விபரீதமாவதை உணர்ந்து ஷாருக்குக்கு இன்டர்காம் மூலம் தகவல் தெரிவித்தனர். ஷாருக்கும் உடனே வீட்டை விட்டு வெளியே வந்துள்ளார். ஆனால் அதற்குள் கத்தி முடித்து விட்டு காரில் ஏறிப் போய் விட்டார் சல்மான்.

சல்லு, ஏன் இந்த லொள்ளு?

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X