மீண்டும் ஷாருக்-கஜோல்

By Staff

Kajol
பாலிவுட்டின் வெற்றிகரமான ஜோடிகளில் ஒன்றாக இன்றளவும் கருதப்படும் ஷாருக்கானும், கஜோலும் மீண்டும் இணைந்து நடிக்கவுள்ளனர்.

மேட் பார் ஈச் அதர் என்ற வார்த்தைக்கு சரியான பொருத்தம் ஷாருக்கானும், கஜோலும். இருவரும் இணைந்து நடித்த படங்கள் அத்தனையும் சூப்பர் டூப்பர் ஹிட்.

குறிப்பாக தில்வாலே துல்ஹானியா லே ஜாயங்கே. இப்படத்தை பார்க்காதவர்களே இருக்க முடியாது. அந்த அளவுக்கு படத்தை சூப்பர் ஹிட் ஆக்கிய பெருமை, கஜோலுக்கும், ஷாருக்குக்கும் உண்டு.

கஜோல் பின்னர் அஜய் தேவ்கனை திருமணம் முடித்துக் கொண்டு செட்டிலாகிவிட்டார். எப்போதாவது சில படங்களில் மட்டுமே தலையைக் காட்டி வந்தார்.

இந் நிலையில் மீண்டும் ஷாருக் ஜோடியாக நடிக்கப் போகிறார்.

இந்த ஜோடி இப்போது பெரும் இடைவெளிக்குப் பின்னர் மீண்டும் சேருகிறது. படத்தின் பெயர் 'மை நேம் இஸ் கான்'. கலிபோர்னியாவில் வைத்து இப்படத்தின் பெரும் பகுதியை ஷூட் செய்யவுள்ளனராம்.

சமீபத்தில் வெளியான ஷாருக்கின் ரப்னே பனாயா ஜோடி மாபெரும் வெற்றி பெற்றது. இதையடுத்து வந்த அமீரின் கஜினி இந்த வெற்றியையையும் விஞ்சி வசூலில் சாகசம் படைத்து வருகிறது.

இதையடுத்து தனது அடுத்த படத்தை இதைவிட பெரிய வெற்றியாக்க கஜோலை மீண்டும் இழுத்து வந்துள்ளார் ஷாருக் கான்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X