செளந்தர்யாவுக்கு விஜய்யின் 51வது படம்

விஜய்யின் 50வது படத்தை ஜெயம் ராஜா இயக்கவுள்ளார். இப்படத்தை எஸ்.ஏ.சந்திரசேகரே தயாரிக்கவுள்ளார்.
ராஜா ரீமேக்கில் ராஜா என்பதால் இப்படத்தின் கதையும் ரீமேக் ஆக இருக்கலாம் என சந்தேகம் இருந்தது. ஆனால் பக்கா ஒரிஜினல் கதையுடன் ராஜா களம் இறங்கப் போகிறாராம்.
இப்படத்தை முதல் காப்பி அடிப்படையில் தயாரித்து, ரிலீஸ் செய்ய சன் டிவியின் சன் பிக்சர்ஸும் முயற்சிப்பதாக கூறப்படுகிறது.
இதற்கிடையே, விஜய்யின் 51வது படத்தை செளந்தர்யா ரஜினிகாந்த்தின் ஆக்கர் ஸ்டுடியோஸும், வார்னர் பிரதர்ஸும் இணைந்து தயாரிக்கவுள்ளன.
இப்படத்தை லிங்குச்சாமி இயக்குவார் எனக் கூறப்படுகிறது. தற்போது பையா படத்தை உருவாக்கிக் கொண்டிருக்கும் லிங்குச்சாமி அதை முடித்து விட்டு செளந்தர்யா ரஜினியின் படத்துக்கு வருகிறாராம்.
Comments
51வதுபடம் 51st movie சினிமா செளந்தர்யாரஜினிகாந்த் தமிழ் லிங்குச்சாமி விஜய் cinema linguchamy soundarya rajinikanth vijay


Click it and Unblock the Notifications