'கேப்டன்' படத்தில் ஸ்ரீதேவிகா!

விஜயகாந்த் நடித்துள்ள 150வது படம் அரசாங்கம். அப்படத்தில் கேப்டனுக்கு ஜோடியாக நவ்னீத் கெளர் நடித்துள்ளார். படம் பிரமாண்டமாக வந்துள்ளது. பாடலை சமீபத்தில்தான் 'கிராண்ட்' ஆக வெளியிட்டனர்.
இந்த நிலையில் அடுத்த படமாக எங்கள் ஆசான் உருவாகவுள்ளது. அரசாங்கத்தில் அரசியல் இருக்காது, ஆனால் எங்கள் ஆசானில் அரசியல் உண்டு என கேப்டன் கூறியுள்ளதால், எங்கள் ஆசான் குறித்து ஏக எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
இப்படத்தில் அனைத்தும் ரெடியாகி விட்ட நிலையில் ஹீரோயின் மட்டும் கிடைக்கவே இல்லை. பல ஹீரோயின்களை அணுகியும் கூட சரிப்பட்டு வரவில்லை. கேரளா பக்கம் முகாமிட்டு தேடியும் ஹீரோயின் கிடைக்கவில்லை.
இந்த நிலையில்தான் ராமகிருஷ்ணா நாயகி ஸ்ரீதேவிகா, ஹீரோயினாக புக் செய்து விட்டனர். ராமகிருஷ்ணாவுக்குப் பிறகு ஸ்ரீதேவிகாவுக்கு 'பிரேக்'கும் இல்ைல, படமும் இல்ைல. இதனால் விட்டத்ைத வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்த ஸ்ரீதேவிகாவுக்கு இப்போது கேப்டன் பட வாய்ப்பு தேடி வந்துள்ளது.
எப்படியாச்சும் இப்படத்தின் மூலம் கோலிவுட்டில் நமக்கும் ஒரு இடத்ைத உறுதி செய்து கொள்ள வேண்டும் என்று புத்துணர்ச்சியுடன் ஷூட்டிங்குக்குத் தயாராகி வருகிறாராம் ஸ்ரீதேவிகா.


Click it and Unblock the Notifications











