சூர்யா சன் ஆப் கிருஷ்ணன்!

கெளதம் மேனனின் இயக்கத்தில் சூர்யா, சமீரா ரெட்டி, சிம்ரன், திவ்யா (குத்து ரம்யா) ஆகியோரின் நடிப்பில், ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் உருவாகியுள்ள படம் வாரணம் ஆயிரம்.
இப்படம் தெலுங்கில் சூர்யா சன் ஆப் கிருஷ்ணன் என்ற பெயரில் வெளியாகிறது. வருகிற நவம்பர் 14ம் தேதி ஆந்திரா முழுவதும் படம் திரைக்கு வருகிறது.
அதற்கு முன்பாக வெளியிடப்பட்ட பட டிரைலருக்கு பெத்த வரவேற்பு கிடைத்துள்ளதாம். கிட்டத்தட்ட 200 தியேட்டர்களில் டிரைலரை போட்டுள்ளனர். கஜினியை விட மிகப் பெரிய ஹிட்டாக இப்படம் சூர்யாவுக்கு அமையும் என தெலுங்கு ரசிகர்கள் இப்போதே பேச ஆரம்பித்து விட்டனராம்.
படத்தை வெளியிடும் உரிமையைப் பெற்றுள்ள விநியோகஸ்தர் ஷோபா ராணி, சூர்யா சன் ஆப் கிருஷ்ணன் மிகப் பெரிய ஹிட்டாக அமையும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
சூர்யாவுக்கு தெலுங்கிலும் பெரிய மார்க்கெட் உள்ளது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











