ஒரே வீட்டில் 'சிங்கமும்' 'சிறுத்தை'யும்!

இப்போது அவரது தம்பி கார்த்தி நடிக்கும் படத்துக்கு சிறுத்தை எனப் பெயர் வைத்திருக்கிறார்கள். இதில் இரட்டை வேடம் ஏற்றுள்ளாராம் கார்த்தி.
இந்தப் படத்தில் சிறுத்தைக்கு ஜோடியாக நடிப்பவர் அனுஷ்கா. ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் சார்பில் ஞானவேல் தயாரிக்கிறார்.
தெனாவட்டு படத்தை இயக்கிய கதிர் இந்தப்படத்தை இயக்குகிறார். இதற்கிடையே வெண்ணிலா கபடி குழு படத்தை இயக்கிய சுசீந்திரனும் தனது அடுத்த படம் தொடர்பாக கார்த்தியை சந்தித்துப் பேசியுள்ளதாகவுமந், இருவரும் ஒரு படத்தில் இணைவதற்கான வாய்ப்புகள் இருப்பதாகவும் கூறப்படுகிறது.
சூர்யாவின் சிங்கம் மற்றும் கார்த்தியின் சிறுத்தை இரண்டையும் ஒரே நேரத்தில் வெளியிடும் திட்டமும் உள்ளதாம்.


Click it and Unblock the Notifications











