சூர்யாவின் 25வது படம் 'சிங்கம்'!

By Staff

Surya and Tamanna
வாரணம் ஆயிரம் சற்றே சறுக்கினாலும், அதற்கு வட்டியும் முதலுமாக சேர்த்து வசூலித்துக் கொண்டிருக்கிறது சூர்யாவின் அயன்.

அயன் வெற்றி தந்த புதுத் தெம்பிலேயே தனது அடுத்த படம் குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார் சூர்யா.

இந்தப் படத்தை இயக்குபவர் ஹரி. இருவரும் ஏற்கெனவே ஆறு, வேல் ஆகி கமர்ஷியல் சரவெடிகளைத் தந்தவர்கள்தான். மூன்றாவது முறையாக இணைகிறார்கள். இந்தப் படத்தின் கூடுதல் சிறப்பு, இது சூர்யாவுக்கு 25வது படம்.

'சில்லுனு ஒரு காதல்', 'பருத்திவீரன்' ஆகிய வெற்றிப் படங்களைத் தந்த கே.ஈ.ஞானவேல்ராஜாவின் 'ஸ்டுடியோ க்ரீன்' நிறுவனம், பிக்பிக்சர் நிறுவனத்துடன் இணைந்து 'சிங்கம்' திரைப்படத்தைத் தயாரிக்கவிருக்கிறது.

காக்க காக்க திரைப்படத்திற்குப் பிறகு இந்தப் படத்தில் மறுபடியும் போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார் சூர்யா. அதே போல் சாமி திரைப்படத்திற்குப் பிறகு மறுபடியும் ஒரு பரபரப்பான போலீஸ் கதையினை ஹரி இயக்குகிறார்.

முதன்முறையாக இந்தப் படத்தில் சூர்யாவுடன் இணைந்து கதாநாயகியாக நடிக்கிறார் ஆந்திராவின் லேட்டஸ்ட் கவர்ச்சி மிளகாய் அனுஷ்கா. பிரகாஷ்ராஜ், விவேக் மற்றும் முன்னனி நட்சத்திரங்கள் பலரும் படத்தில் உண்டு.

தேவிஸ்ரீபிரசாத் இசையமைக்க ப்ரியன் ஒளிப்பதிவு செய்கிறார். எடிட்டிங் வி.டி.விஜயன், கலை கே.கதிர். இணை இயக்கம் பி.ஹெச். குமணன்.

மக்கள் தொடர்பு நிகில் முருகன்.

கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் "ஆதவன்" திரைப்படம் முடிந்த கையோடு, 'சிங்கம்' படத்தின் முதற்கட்டப் படப்பிடிப்பு திருநெல்வேலி, தூத்துக்குடி, அம்பாசமுத்திரம், குற்றாலம் மற்றும் காரைக்குடி ஆகிய இடங்களில் நடைபெறுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X