twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    600 அடி பள்ளத்தாக்கு நுனியில் அதிர வைத்த சூர்யா!

    By Staff
    |

    Surya
    600 அடி பள்ளத்தாக்கின் நுன்ப் பகுதியில் நின்று டூப்பே இல்லாமல் சண்டை போட்டு படப்பிடிப்புக் குழுவினரை அதிர வைத்தார் சூர்யா.

    ஏவி.எம்.சரவணன், எம்.எஸ்.குகன் தயாரிக்கும் அயன் படத்தில்தான் இந்த மயிர்க்கூச்செரிய வைக்கும் சண்டை இடம் பெறுகிறது.

    இந்தப் படத்தின் படப்பிடிப்பு அனுபவங்கள் குறித்து இயக்குநர் கே.வி. ஆனந்த் கூறியிருப்பதாவது:

    கல்லூரி முடிந்தபின் ஒவ்வொரு இளைஞனும் வாழ்வில் சந்திக்கும் சம்பவங்களை மையப்படுத்தி அயன் படத்தை எடுத்து வருகிறேன். ஒவ்வொரு காட்சிக்கும் நம்பகத்தன்மை இருக்க வேண்டும் என்று எழுத்தாளர் சுபாவும் நானும் முடிவு செய்தோம்.

    அதன்படி முடிந்த வரை யதார்த்தமாக எடுத்துள்ளோம். இதுவரை இல்லாத அளவுக்கு ஆக்ஷன் காட்சியில் சூர்யா அசத்தி இருக்கிறார். ஆப்ரிக்காவில் படமான ஒரு சண்டைக் காட்சி பிரமிக்க வைக்கும்படி வந்துள்ளது.

    இக் காட்சியில் 600 அடி பள்ளத்தாக்கின் நுனியில் டூப் போடாமல் சண்டை போட்டார். கனல் கண்ணன் வடிவமைத்த ஸ்டண்ட் காட்சிகளை ஹாலிவுட் ஸ்டண்ட் இயக்குனர் பிரான்ஸ் ஸ்பில்லோஸ் தகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் நடத்தித் தந்தார்.

    நடிகை தமன்னா இந்தப் படத்தில் மிகச் சிறப்பாக நடித்துள்ளார். இந்தப் படத்துக்குப் பின் அவர் முதல்நிலை நாயகியாக வலம் வருவார்.

    படப்பிடிப்பு பெரும்பகுதி முடிந்துவிட்டது. விரைவில் வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்படும், என்றார் கேவி ஆனந்த்.

    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X