கரணுக்கு 2!

வில்லனாக அறிமுகமாகி, வில்லத்தனம், குணச்சித்திரம், 2வது ஹீரோ என சகல வழிகளிலும் கலக்கிய கரண் இப்போது ஹீரோ. கருப்பசாமி குத்தகைதாரர் படத்தில் ஆரம்பித்து காத்தவராயன் வரை வந்து நின்று வென்றிருக்கிறார்.
கரண் அடுத்து நடிக்கப் போகும் படம் மலையன். இதுவரை ஒரு ஹீரோயினுடன் நடித்து வந்த கரண் இப்படத்தில் 2 ஹீரோயின்களுடன் இணைகிறார்.
ஒருவர் கண்ணும் கண்ணும் புகழ் உதயதாரா. இன்னொரு மும்பையிலிருந்து வந்திருக்கும் புதுமுகம் ஷம்மு.
பெரும் எதிர்பார்ப்புடன் நடிக்க வந்த உதயதாரா கண்ணும் கண்ணும் படத்திற்குப் பிறகு ஆளைக் காணவில்லை. இந்த நிலையில் மலையன் மூலம் ரீ என்ட்ரி கொடுக்கவுள்ளார்.
இப்படத்துக்காக சமீபத்தில் ஒயிலாட்டம், மயிலாட்டம், கரகாட்டம் உள்ளிட்ட நாட்டுப்புற கலைகளை இணைத்து ஒரு சூப்பரான பாட்டை படமாக்கினார்களாம்.


Click it and Unblock the Notifications











