சுல்தானில் வியட்நாம் பைட்டர்கள்!

By Staff

Sultan the Warrior movie still
ரஜினிகாந்த்தின் இளைய மகள் செளந்தர்யா ரஜினிகாந்த் இயக்கி வரும் சுல்தான் தி வாரியர் அனிமேஷன் படத்தில் வியட்நாமைச் சேர்ந்த சண்டைப் பயிற்சிக் கலைஞர்கள் பங்கேற்கவுள்ளனராம்.

செளந்தர்யா ரஜினிகாந்த் தனது தந்தையை வைத்து சுல்தான் தி வாரியர் எனகிற அனிமேஷன் படத்தை எடுத்துக் கொண்டிருக்கிறார். பெரும் பொருட் செலவில் இந்தப் படம் உருவாகி வருகிறது.

தற்போது இதன் உருவாக்கம் கடைசிக் கட்டத்தில் உள்ளது. சில முக்கிய காட்சிகளை, கிழக்கு ஆசிய நாடுகளில் நேரடியாக சென்று படம் பிடிக்க திட்டமிட்டுள்ளனர். இதன் மூலம் படத்திற்கு உயிர்ப்பு கூடும் என்பது செளந்தர்யாவின் கருத்து.

மேலும், இப்படத்தில் வரும் சண்டைக் காட்சிகளில் மேலும் தத்ரூபத்தைக் கொடுக்கும் வகையில், சில வியட்நாம் சண்டைப் பயிற்சிக் கலைஞர்களை வைத்துப் படம்பிடிக்கிறார்கள். படத்தில் சண்டைக் காட்சிகளை அமைத்திருப்பவர் பீட்டர் ஹெய்ன்.

இந்தக் காட்சிகளை வியட்நாமுக்கே சென்று படம் பிடிக்கவுள்ளனர். விரைவில் இதற்காக படக் குழு வியட்நாம் செல்லவுள்ளது.

இந்தக் காட்சி படத்திற்கு முக்கியம் என்பதால் வியட்நாம் சென்று அங்குள்ள சண்டைக் கலைஞர்களை பயன்படுத்த முடிவு செய்திருப்பதாக கூறியுள்ளார் செளந்தர்யா.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X