விஜயகாந்த்தின் அரசாங்கத்திற்கு நெருக்கடி

By Staff

Vijaykanth with Navneeth Kou
விஜயகாந்த் நடித்துள்ள 150வது படமான அரசாங்கம் படத்தை வாங்க விநியோகஸ்தர்கள் தரப்பில் திடீர் தயக்கம் காணப்படுகிறதாம். 'எங்கிருந்தோ' கொடுக்கப்படும் இந்த நெருக்கடியால் கலங்காத கேப்டன், தானே சொந்தமாக படத்தை ரிலீஸ் செய்யத் திட்டமிட்டுள்ளாராம்.

விஜயகாந்த் நடித்துள்ள 150வது படம் அரசாங்கம். அவரது மைத்துனர் சுதீஷ் இப்படத்தைத் தயாரித்துள்ளார். இரு ஹீரோயின்கள் கேப்டனுடன் இணைந்துள்ளனர்.

படத்தின் ஆடியோ வெளியீடு பிரமாண்டமாக நடந்தது. சாதனை அளவாக கேசட்டுகள், சிடிக்கள் புக் ஆகின. படத்தை ஏப்ரல் 15ம் தேதி ரிலீஸ் செய்ய முதலில் திட்டமிட்டிருந்தனர். ஆனால் படம் வெளியாவது தாமதமாகி வருகிறது.

இதற்குக் காரணம், எங்கிருந்தோ கொடுக்கப்படும் நெருக்கடியால் விநியோகஸ்தர்கள் பலரும் படத்ைத வாங்க தயக்கம் காட்டுகின்றனராம்.

இந்த நெருக்கடிகள் குறித்த தகவல் கேப்டனுக்கும் போயுள்ளதாம். இவங்களுக்கு வேறு வேலையே இல்லையா என்று சலித்துக் கொண்ட கேப்டன், இதுவரை இவர்களை சமாளித்து விட்டேன். இதையும் சமாளிக்க மாட்டேனா என்று கேஷுவலாக கூறியுள்ளாராம்.

மேலும், யாரும் படத்தை வாங்க வேண்டாம். நாமே தமிழகம் முழுவதும் சொந்தமாக வெளியிடுவோம். அப்போது பார்ப்போம் யார் தடுக்கிறார்கள் என்றும் கோபமாக கூறியுள்ளாராம்.

இதனால் அரசாங்கத்தை விஜயகாந்த்தே தமிழகம் முழுவதும் திரையிடவுள்ளதாக கூறப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X