விக்ரம் ஜோடி ஐஸ்வர்யா!!

இந்தப் புதிய இரட்டை மொழிப் படத்தில் சீயான் விக்ரம் ஹீரோவாக நடிக்கிறார் என்பதை ஏற்கனவே காதில் போட்டு வைத்திருந்தோம். இப்போது விக்ரமுக்கு ஜில்லென்று ஒரு நாயகி முடிவாகியுள்ளார். அவர் ஐஸ்வர்யா ராய்.
இந்தப் படத்தின் தமிழ் பதிப்பில் விக்ரமுக்கு ஜோடியாக ஐஸ்வர்யா ராய் நடிக்கப் போகிறாராம். இந்தியில் மட்டும் ஆத்துக்காரர் அபிஷேக்தான் ஜோடியாம்.
விக்ரமுக்கு இது முதல் இந்திப் படம். முதல் இந்திப் படத்திலேயே தனது தோஸ்த் அபிஷேக் பச்சனின் மனைவிக்கு ஜோடியாக நடிக்கிறார்.
படத்துக்கு இன்னும் பெயர் சூட்டவில்லையாம் மணி. ஆனால் அதற்குள் ஸ்கிரிப்ட் வேலைகளை முடித்து விட்டார். விரைவில் படப்பிடிப்பைத் தொடங்கவுள்ளார்.
விக்ரம் சரளமாக பேசி நடித்து வருகிறார். அவரையும் இப்போது துண்டு துண்டாக பேச வைக்கப் போகிறார் மணிரத்னம்.
'பகுத் குஷி சீயான்ஜி'!
Comments


Click it and Unblock the Notifications