இந்திக்கு மாறும் அர்ஜூன்!

கன்னடத்தில் நடித்துக் கொண்டிருந்த அர்ஜூன் தமிழுக்கு வந்து ஆக்ஷன் கிங் என்ற பெயரோடு இன்று வரை அசத்திக் கொண்டிருக்கிறார். தேச பக்திக் கதைகளாக தேர்வு செய்து வெற்றி பெற்ற அர்ஜூன் இயக்குநராகவும் வெற்றி பெற்றவர்.
இவரது படங்களில் சண்டைக் காட்சிகளில் பொறி பறக்கும். காரணம், அர்ஜூன், சண்டைக் காட்சிகளுக்கு கொடுக்கும் பிரத்யேக கவனமே.
தமிழ், தெலுங்கு, கன்னடம் என பல மொழிப் படங்களில் நடித்து விட்ட அர்ஜூன் அடுத்து இந்திக்கு தனது கவனத்தை திருப்பியுள்ளார்.
விரைவில் ஒரு இந்திப் படத்தை இயக்கப் போகிறாராம் அர்ஜூன். இதில் முன்னணி நடிகர் ஒருவரை ஹீரோவாக நடிக்க வைக்கும் திட்டம் உள்ளதாம். படம் வெற்றி பெற்றால் முழு அளவில் இந்தியில் படம் இயக்கும் திட்டமும் அர்ஜூனுக்கு உள்ளதாம்.
Comments


Click it and Unblock the Notifications