சரிகாவை கமல் திருமணம் செய்தது ஏன்?

By Staff

Kamal Haasan
டெல்லி: 'ஹோட்டல்களில் அறை எடுக்க சங்கடங்கள் இருந்ததால்தான் நான் சரிகாவை திருமணம் செய்து கொண்டேன்!" என்று நடிகர் கமல்ஹாசன் கூறினார்.

வட இந்திய தனியார் சேனலுக்கு கமல் ஹாசன், நேற்று பேட்டியளித்தார். அதில் அவர் கூறியதாவது:

திருமணங்கள் தோல்வியில் முடிகின்றன. எனவே திருமணங்கள் தேவையில்லை. குடும்ப அமைப்பு மிகவும் சக்தி வாய்ந்தது என்பதை ஒப்புக் கொள்கிறேன். அது பலமானது. ஆனால் அதற்காக திருமணம் அவசியமில்லை.

வாணி கணபதி, சரிகா ஆகியோரை நான் திருமணம் செய்து கொண்டேன். எனக்கு பிடித்தவர்களின் ஆசையை நிறைவேற்ற நான் செய்த முட்டாள்தனமான செயல்தான் திருமணம். நான் செய்து கொண்ட ஒரு சமரசம் அது. நான் விரும்பிய பெண்ணுடன் இருக்க நான் கொடுத்த விலைதான் திருமணம், என்றார்.

உடனே செய்தியாளர் குறுக்கிட்டு,'அப்படியானால் 2 குழந்தைகள் பெற்ற பின் சரிகாவை ஏன் திருமணம் செய்து கொண்டீர்கள்?' என்றார்.

அதற்கு கமலஹாசன், "ஹோட்டல்களில் அறை எடுத்து தங்குவதில் சங்கடங்கள் ஏற்பட்டன. 'இந்தக் குழந்தைகளின் தாயார் இவர்' என்று சொன்னால் அதுமட்டும் போதாது. எனது மனைவி யார்? என்றும் கேட்டனர். எனவேதான் சரிகாவை துணைவியாக ஆக்கிக் கொண்டேன்.

என் குழந்தைகளுடன் இப்போது சரிகா எந்த தொடர்பும் வைத்துக் கொள்ளவில்லை. அவர்களும் அப்படித்தான். குழந்தைகள், சரிகாவுடன் இருக்க விரும்பவில்லை.

அவர்கள் வயது வந்தவர்கள். வாக்களிக்கவும் சுயமாக முடிவு எடுக்கவும் அவர்களால் முடியும். எனவே அந்தப் பிரச்னையில் நான் தலையிடுவது இல்லை.

அரசியலில் நானும் இருக்கிறேன்!

நான் அரசியலில் ஈடுபடுவேனா? என்று கேட்கிறார்கள். அரசியலில் நானும் இருக்கிறேன். ஆனால் நான் அரசியல்வாதியல்ல. என் படங்களில் அரசியல் கருத்துக்கள் அழுத்தமாக இடம் பெற்று இருக்கும்.

நான் அரசியலுக்கு வருவதை மக்கள் விரும்ப மாட்டார்கள். என் மீது கடும் கோபம் கொள்வார்கள். பிறகு நான் துப்பாக்கியுடன் தான் செல்ல வேண்டியது இருக்கும்... என்றார் கமல்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X