தேவர் காட்டிய பாதையில் வாழ வேண்டும்-நடிகர் கருணாஸ்

சிவகிரி பஸ் நிலையம் முன்பு தேவர் மகாசபை சார்பில் தேவர் ஜெயந்தி விழா பொதுகூட்டம் நடந்தது. அதில் நடிகர் கருணாஸ் கலந்து கொண்டு பேசுகையில்,
தமிழகத்தில் நான் திரைப்படதுறைக்கு 12 வயதில், இசைத்துறை மூலம் வந்தேன். தற்போது சினமாதுறையில் நான் பரபரப்பாக உள்ள நிலையில் சமுதாய பணியில் ஈடுபடலாம் என நினைத்தபோது பலர் அதனால் கலைத்துறையில் உங்களுக்கு பாதிப்பு வரும் என தெரிவித்தனர்.
சுயநலத்திற்காக சில சமுதாயத் தலைவர்கள் அரசியல் செய்வதால் சமுதாயம் தடம் மாறி செல்கிறது. எனவே சமூகத்தை நல்ல வழியில் கொண்டு செல்வதற்காகவே இவ்விழாவில் பங்கேற்க வந்துள்ளேன்.
மேலும் தேசியமும், தெய்வீகமும் தனது இருகண்கள் என பசும்பொன் முத்துராமலிங்கதேவர் சாதி, மதங்களுக்கு அப்பற்பட்டு அரசியல் பணியாற்றிய அவரது வழியில் நாமும் வாழ வேண்டும். அதே நேரத்தில பொருளாதார ரீதியாகவும், நாம் முன்னேற்றமடைய அனைவரும் தங்களது குழந்தைகளை படிக்க வைத்திட வேண்டும் என்றார் கருணாஸ்.


Click it and Unblock the Notifications











