twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    'கேரளா எனக்கு இன்னொரு அம்மா' - கமல்

    By Chakra
    |

    Kamal Hassan
    சென்னை: "கருத்து வேறுபாடுகளுக்கு அப்பாற்பட்டவர்கள் கலைஞர்கள். மலையாள நடிகர்கள் என் சகோதரர்கள். தமிழகத்தைப் போலவே கேரளா எனக்கு இன்னொரு அம்மா", என்றார் நடிகர் கமல்ஹாசன்.

    கலையுலகில் நடிகர் கமல்ஹாசனின் 50 ஆண்டு கால சாதனையைப் பாராட்டி கவுரவிக்கும் வகையில் அவருக்கு கேரள அரசாங்கம் திருவனந்தபுரத்தில் பாராட்டுவிழா நடத்தியது.

    கேரள முதல்வர் அச்சுதானந்தன், கல்வி மந்திரி பேபி உள்பட அரசியல் பிரமுகர்கள் பங்கேற்று கமலுக்கு மரியாதை செய்த அந்த விழாவில் மலையாள நடிகர்-நடிகைகள் யாரும் கலந்துகொள்ளவில்லை.

    அந்த விழாவில், இயக்குநர் கே.பாலசந்தர் கலந்துகொள்வதாக இருந்தார். சென்னையில் நடந்த முதல்வர் சம்பந்தப்பட்ட விழாவில் அவர் கலந்துகொள்ள வேண்டியது இருந்ததால், கமல்ஹாசன் பாராட்டுவிழாவில் பங்கேற்க முடியாமல் போய்விட்டது.

    இதுதொடர்பாக இயக்குநர் பாலசந்தர், கமல்ஹாசனை பாராட்டி ஒரு அறிக்கை விடுத்தார். அதில், "காந்திக்கு அடையாளம் கண்ணாடி, பாரதியாருக்கு அடையாளம் மீசை. எம்.ஜி.ஆருக்கு அடையாளம் தொப்பி. நேருவுக்கு அடையாளம் ரோஜா. ஆனால், கமல்ஹாசன் ஒரு ஆச்சரியக்குறி" என்று குறிப்பிட்டிருந்தார்.

    இதுகுறித்து கமல் கருத்து தெரிவிக்கையில், "பாலச்சந்தர் என்னுடைய குரு. பொதுவாக குருநாதர்கள் காசு வாங்கிக் கொண்டு வித்தை கற்றுத் தருவார்கள். ஆனால் அவர் என்னிடம் காசு வாங்காமல், காசு கொடுத்து கற்றும் கொடுத்தார். அப்படிப்பட்டவர் என்னை ஆச்சர்யக்குறி என்று சொன்னதற்கு நான் தகுதியானவன்தானா? தெரியவில்லை", என்றார்.

    கேரள அரசின் பாராட்டு மற்றும் மலையாள நடிகர்களின் புறக்கணிப்பு பற்றி மேலும் அவர் கூறுகையில், "கேரள அரசாங்கம் எனக்கு பாராட்டுவிழா நடத்தியது சந்தோஷமான விஷயம். என் ஆரம்ப காலம் மலையாள படஉலகில்தான் தொடங்கியது. நான் தமிழ்நாட்டில் பிறந்திருந்தாலும் கேரளாவைச் சேர்ந்தவர்கள் என்னை ஒரு கலைஞனாக ஏற்றுக்கொண்டார்கள். அதற்கு கலைதான் காரணம். அந்த பலம், கலைக்குத்தான் உண்டு.

    'எனக்கு கேரளா இன்னொரு அம்மா!'

    மற்ற மாநிலத்தவர்களை விட கல்வியறிவு அதிகம் உள்ளவர்கள் கேரள மக்கள். எனக்கு அவர்கள் ஓர் அங்கீகாரம் கொடுத்ததுடன் மண்ணின் மைந்தன் போல் நடத்தினார்கள். கணியன் பூங்குன்றனார், "யாதும் ஊரே யாவரும் கேளிர்'' என்று சொன்னார். அதில் எனக்கு உடன்பாடு உண்டு. அரசியல், பூகோளம் காரணமாகத்தான் தமிழ்நாடும், கேரளாவும் பிரிந்துள்ளன.

    கருத்து வேறுபாடுகளுக்கு அப்பாற்பட்டவர்கள் கலைஞர்கள். கல்யாண வீட்டில் வரும் கருத்து வேறுபாடு போன்றுதான் கேரளாவில் நடந்த சம்பவமும். மலையாள நடிகர்கள் அனைவரும் என் சகோதரர்கள்தான். எனக்கு தமிழ்நாடு ஒரு அம்மா என்றால் கேரளா இன்னொரு அம்மா.

    சின்ன வயதில் எனக்கு இரண்டு அம்மா இருந்தார்கள். ஒரு அம்மா என்னை பெற்ற தாய். இன்னொரு அம்மா என் அண்ணியார். அந்த இரண்டு அம்மாக்களும் சேர்ந்துதான் என்னை வளர்த்தார்கள். அதுபோல் இப்போதும் எனக்கு இரண்டு அம்மாக்கள் இருக்கிறார்கள். "தீதும் நன்றும் பிறர்தர வாரா'' என்பார்கள். நான் எந்த வகையிலாவது என் சகோதரர்களை புண்படுத்தி இருப்பேனோ என்று எனக்கு தெரியாது...,"என்றார்.

    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X