மீண்டும் மலையூர் மம்பட்டியான்!

வில்லனாக வந்து போய்க் கொண்டிருந்த தியாகராஜனுக்கு பெரும் பெயர் பெற்றுத் தந்த படம் அவர் முதல் முறையாக ஹீரோவாக நடித்த மலையூர் மம்பட்டியான். நிஜத்தில் நடந்த இந்த கதை படமாகி வெளியாகியபோது பட்டி தொட்டியெங்கும் பெரும் ஓட்டம் ஓடியது.
இப்படத்தை தற்போது தனது மகன் பிரஷாந்த்தை வைத்து ரீமேக் செய்து வருகிறார் தியாகராஜன். இவரே தயாரித்து, இயக்குகிறார்.
தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் உள்ள யாருமே எளிதில் போக முடியாத வனப்பகுதிகளுக்குச் சென்று படப்பிடிப்பை நடத்தியுள்ளனராம்.
இப்படம் ரீமேக் ஆக இருந்தாலும் கூட இக்கால தலைமுறையினருக்கும் எளிதில் புரியும் வகையில், விரும்பும் வகையில் திரைக்கதையில் லேசான மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாம்.
ஒரிஜினல் மலையூர் மம்பட்டியானை விட இந்த ரீமேக் மம்பட்டியான் இன்னும் கிராண்ட் ஆக இருக்கும் என்கிறார் தியாகராஜன்.
இதுகுறித்து அவர் கூறுகையில், இப்படத்திற்காக சிறந்த தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி சண்டைக் காட்சிகளை படமாக்கியிருக்கிறோம். பிரமிக்கத்தக வகையில் சண்டைக் காட்சிகள் வந்துள்ளன.
ஒரு மலையிலிருந்து இன்னொரு மலைக்குத் தாவுவது, கீழே விவும் பாலத்தில் குதித்து ஓடுவது என்று மயிர்க்கூச்செறியும் காட்சிகளில் பிரஷாந்த் நடித்துள்ளார்.
இதுதவிர அனைவரையும் பிரமிக்க வைக்கும் வகையில் ஒரு போலீஸ் துரத்தல் காட்சியையும் படமாக்கியிருக்கிறோம்.
படத்தில் நிறைய ஸ்பெஷல் எபக்ட்ஸ் இடம் பெற்றுள்ளன. ஆக்ஷன் நிறைந்த படமாக மலையூர் மம்பட்டியான் உருவாகியுள்ளது என்றார்.
அப்ப, இந்த ஆண்டின் 'வின்னர்' பிரஷாந்த்தான்..!


Click it and Unblock the Notifications











