ரசிகர் தொல்லை: கிளம்பிய ரஜினி-ஐஸ்!

By Staff

Rajinikanth with Aishwarya rai
வேலூரில் ரசிகர்கள் கூட்டத்தைக் கட்டுப்படுத்த முடியாததால் எந்திரன் படப்பிடிப்புக் குழு சென்னை திரும்பிவிட்டது. வேலூரில் இன்னும் இரு தினங்கள் எடுக்க வேண்டியிருந்த மீதிக் காட்சிகளை சென்னையில் வைத்துப் படமாக்கி வருகின்றனர்.

வேலூரில் ஒரு வாரமாக எந்திரன் படப்பிடிப்பு நடந்தது. அப்போது திரண்ட கூட்டத்தைக் கட்டுப்படுத்த முடியாமல் எக்கச்சக்கமாக போலீஸ் குவிக்கப்பட்டது. உயரதிகாரிகள் வந்து கட்டுப்படுத்தியும் முடியவில்லை.

ரஜினி, எந்திரனை உருவாக்குவது போலவும் அவரது உதவியாளர் ஐஸ்வர்யாராய் சந்தோஷத்தில் துள்ளி குதிப்பது போலவும் காட்சிகள் எடுக்கப்பட்டன.

பின்னர் எந்திரனை உருவாக்கியது பற்றி பத்திரிகையாளர்களுக்கு ரஜினி தெரிவிப்பது போன்ற காட்சிகளை எடுத்தனர். இதற்காக வேலூர் மற்றும் சென்னையில் இருந்து 50க்கும் மேற்பட்ட போட்டோகிராபர்கள் வரவழைக்கப்பட்டிருந்தனர்.

ஆராய்ச்சி கூட வாசலில் ரஜினி நடந்து வருவது போலவும் அவரை போட்டோகிராபர்கள் சூழ்ந்து படம் பிடிப்பது போலவும் காட்சிகள் படமாக்கப்பட்டன. படம் பிடிக்கும் போது அதில் பிலிம் இருக்கக் கூடாது பிளாஷ் மட்டும் செய்ய வேண்டும் என்று போட்டோகிராபர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.

குவிந்தனர் ரசிகர்கள்:!

இதற்கிடையில் ஐஸ்வர்யா, ரஜினியை காண வேலூர் சுற்றுப் பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான ரசிகர்கள் குவிந்தனர். அவர்கள் கூச்சலிட்டபடியே இருந்ததால் படப்பிடிப்பை தொடர்ந்து நடத்த முடியவில்லை.

எனவே ரஜினி, ஐஸ்வர்யா ராய் மற்றும் படக்குழுவினர் சென்னை திரும்பிவிட்டனர்.

நுங்கம்பாக்கத்தில் உள்ள ரயில்வே குடியிருப்பில் படப்பிடிப்பு நடந்து வருகிறது. நள்ளிரவில் இந்த படப்பிடிப்பு நடந்தது. ஒரு வீட்டில் ரஜினியும், ஐஸ்வர்யா ராயும் தங்கியிருப்பது போன்ற காட்சிகளை ஷங்கர் படமாக்கினார்.

இன்னும் இரு தினங்களுக்கு இங்கு படப்பிடிப்பு நடத்தும் திட்டமுள்ளதாம். ஆனால் இங்கும் ரசிகர்கள் திரண்டால், வேறு இடத்துக்கு மாற்றவும் திட்டமிட்டுள்ளார் ஷங்கர்.

இந்த ஷெட்யூல் முடிந்தததும் ரஜினி, ஐஸ்வர்யா ராயுடன் படக் குழு, குலு மனாலிக்குப் பயணமாகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X