'180'... சித்தார்த்தின் மறு பிரவேசம்!

By Shankar

சத்யம் சினிமாஸ் தயாரிக்கும் '180' படத்தின் மூலம் மீண்டும் தமிழ்ப் பட உலகுக்கு வருகிறார் நடிகர் சித்தார்த்.

ஷங்கரால் பாய்ஸ் படத்தில் அறிமுகமாகி, அப்படியே தெலுங்குப் பக்கம் ஒதுங்கிவிட்டவர் சித்தார்த். பார்க்க சாதுவாகத் தெரிந்தாலும், படு அலட்டல் பேர்வழி. அதனாலேயே அவருக்கு மீண்டும் ஒரு தமிழ் சினிமா வாய்ப்பென்பது குதிரைக் கொம்பாக இருந்தது.

கிட்டத்தட்ட 7 ஆண்டுகள் அவருக்கு எந்த தமிழ்ப் பட வாய்ப்பும் இல்லை. இப்போது சத்யம் சினிமாஸ் தயாரிக்கும் '180' என்ற படத்தில் நாயகனாக நடிக்கிறார்.

அவருக்கு ஜோடியாக வெப்பம் பட நாயகி நித்யா நடித்துள்ளார். ஜெயேந்திரா இயக்கியுள்ள இந்தப் படத்தின் அறிமுக நிகழ்ச்சி சத்யம் திரையரங்கில் இன்று நடந்தது. விழாவுக்கு வந்திருந்த சித்தார்த், "நான் பெரிய இயக்குநர்களுடன் மட்டுமே பணியாற்றுவேன் என்று சொன்னதாக வரும் செய்திகளில் உண்மையில்லை" என்றார்.

இயக்குநர் ஜெயேந்திரா, தன் குரு மணிரத்னத்தை ஏகத்துக்கும் புகழ்ந்தார். அவர்தான் இந்தப் படத்தை தான் இயக்கக் காரணம், என்றார். ஷரத் இசையமைத்துள்ள இந்தப் படத்துக்கு ஒளிப்பதிவு பாலசுப்ரமணியன். மக்கள் தொடர்பு நிகில்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X